விஜய் இல்லன்னா தமிழ் சினிமா அழிஞ்சி போயிடுமா..? பிரபல நடிகை விளாசல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்கும் இவர் ஆரம்பத்தில் சில படங்களில் சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக மாறி இருக்கும் தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அடுத்து விரைவில் முழு நேர அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இருக்கிறார்.

விஜய் இல்லைனா..

தளபதி விஜய் ஏற்கனவே பல ஆண்டுகளாக திட்டமிட்டு திரைப்படங்களில் அரசியல் வசனங்களை பேசி வரும் போது விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் களம் குதிக்க இருக்கிறார்.

இந்த விஷயம் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை தந்திருந்தாலும் மறுபக்கம் விஜய் தமிழ் சினிமாவை விட்டு வெளியேறுவது மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

தியேட்டர் ஸ்டாராக சித்தரிக்கப்பட்டு இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்காவிட்டால் தியேட்டர்களின் வருமானம் கெட்டுவிடும் என பல ஊடகங்களில் பல்வேறு வகைகளில் செய்திகள் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

தமிழ் சினிமா அழிந்து போயிடுமா..

இந்நிலையில் தற்போது இவர் தனது கட்சியை பலப்படுத்தக்கூடிய பணிகளில் படு வேகமாக செயல்பட்டு வருகிறார். அத்தோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலக அளவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனை அடுத்து தளபதி 69 படத்தை ஹெச் வினோத்துடன் விஜய் இணைய உள்ளதாக பல்வேறு விதமான செய்திகள் வெளி வரக்கூடிய நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலானது வரும் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை ஒட்டி வெளி வரலாம்.

மேலும் நடிகை கஸ்தூரி விஜய் பற்றி பேசியிருக்கும் பேச்சானது பலரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

அப்படி அந்த பேச்சில் அவர் என்ன பேசினார் என்பது பற்றி தற்போது விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரபல நடிகை விளாசல்..

சமுதாய விழிப்புணர்வு கருத்துக்களை அடிக்கடி பதிவிடக்கூடிய நடிகை கஸ்தூரி விஜய் ஒரு லிட்டர் திரையுலகில் இல்லை என்றால் சினிமா துறை ஒன்றும் பாதித்து விடாது என்று சொன்ன கருத்து தான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏற்கனவே இரண்டு படங்களை மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக அரசியலில் களம் இறங்கப் போகும் விஜய் அரசியலில் பெரிதாக சாதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய வேலையில் நடிகை கஸ்தூரி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் 150 ஆண்டுகள் முன்னதாகவே சினிமா தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டதாகவும் அதில் வெறும் 30 ஆண்டுகள் தான் விஜய் மிகப்பெரிய ஸ்டாராக இருப்பதாகவும் சொன்ன விஷயம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மேலும் சினிமா என்பது ஒரு கலை எனவே இது யாராலும் பாதிப்படையாது வளர்ச்சியை மட்டுமே அடையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து பல ரசிகர்கள் நடிகை கஸ்தூரி சொன்னதில் உண்மை உள்ளது என்று இந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தில் எந்த விஷயத்தை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version