பாத்ரூமில் ரசிகர்கள் செஞ்ச வேலை.. சில்க் ஸ்மித்தாவுக்கு நடந்த கொடுமை.. உண்மையை கூறிய நடிகை கஸ்தூரி..!

ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. ஏகப்பட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் எப்பொழுதும் பிரபலமாக இருந்தாலும் கூட இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கும் நடிகைகள் ஒரு சிலர்தான் இருப்பார்கள்.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகையாக சரோஜாதேவி இருந்தார். சரோஜாதேவிக்கு பிறகு ரஜினி கமல் நடிக்க துவங்கிய பிறகு நடிகை ஸ்ரீதேவி அனைவராலும் விரும்பப்படும் நடிகையாக இருந்தார்.

சில்க் ஸ்மித்தா

இதற்கு நடுவே ஒரு கவர்ச்சி நடிகையாக நடித்தும் கூட இளைஞர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு பெற்றவராக நடிகை சில்க் ஸ்மிதா இருந்தார். இருந்தாலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை என்பது கொஞ்சம் கடுமையானதாக தான் இருந்தது.

மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வாய்ப்பு தேடி வந்த சில்க் ஸ்மிதா தமிழில் கதாநாயகியாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிப்போம் என்று கவர்ச்சி நடிகையாக நடித்தார்.

ரசிகர்கள் செஞ்ச வேலை

பிறகு அதுவே அவருக்கு வாழ்க்கையாக அமைந்துவிட்டது. தொடர்ந்து அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா நடிக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் நடித்த திரைப்படத்திற்கு மக்கள் வருவார்கள் என்கிற நிலை ஏற்பட்டது இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படத்தை போஸ்டரில் போட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்தும் அளவிற்கு சில்க் ஸ்மிதா பிரபலமானார்.

அவர் சம்பளமும் ஏக்கச்சக்கமாக அதிகரித்தது. இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது கிடைத்ததே கிடையாது. ஆனால் அதே சமயம் நிறைய இன்னல்களையும் சில்க் ஸ்மிதா சந்தித்துள்ளார்.

உண்மையை கூறிய நடிகை கஸ்தூரி

இது குறித்து சமகாலத்தில் கதாநாயகியாக இருந்த கஸ்தூரி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அப்பொழுது எல்லாம் சிலுக்கு என்றாலே மக்களுக்கு அவர் மீது கவர்ச்சிதான் அதிகமாக இருந்தது.

அதனாலேயே படப்பிடிப்புகளில் சில்க்கை பார்த்தாலே ரசிகர்கள் மகிழ்ச்சியாகி விடுவார்கள். ஆனால் அதில் சில சமயங்களில் எல்லை மீறிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

ஒரு முறை படத்திற்கு வெளியிடத்திற்கு சென்று இருந்தார் சில்க் ஸ்மிதா. அப்பொழுது அவருக்கான பாத்ரூம் என்பது அங்கு இருந்த வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்தது. அப்படி அவர் பாத்ரூம் செல்லும் பொழுது அதை அங்கிருந்து ரசிகர்கள் பார்த்து விட்டு வேகமாக சென்று பாத்ரூமில் ஜன்னலை உடைத்து சில்க் ஸ்மிதாவை அந்தரங்கமாக பார்த்துவிட்டனர்.

இதை சில்க் ஸ்மிதாவே ஒருமுறை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் எனவே பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை அது சினிமாவில் மட்டும் தான் இருக்கிறது என்று கூற முடியாது. பொதுமக்கள் கூட எங்களுக்கு அந்த மாதிரியான துன்புறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர் என்று கூறுகிறார் கஸ்தூரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version