அந்த விஷயம் எப்போ தேவையோ.. அப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்.. கூச்சமின்றி பேசிய நடிகை கௌசல்யா..

தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கௌசல்யா தனது அபார நடிப்புத் திறனால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து அசத்தி வருகிறார்.

நடிகை கௌசல்யா..

தற்போது பெங்களூரில் வசித்து வரக்கூடிய நடிகை கௌசல்யா காலமெல்லாம் காதல் வாழ்க என்ற தமிழ் படத்தில் முதல் முதலாக அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக டூ பீஸ் நீச்சல் உடையில் குஷ்பூ.. பலரும் பார்த்திடாத ஹாட் பிக்ஸ்..

முதல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் 1998 ஆம் ஆண்டு பிரியமுடன், ஜாலி, சொல்லாமலே, உன்னுடன் போன்ற படங்களில் அற்புதமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து 1999-இல் ஆசையில் ஒரு கடிதம் படத்தில் நடித்த இவர் 2000 ஆவது ஆண்டு வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, ராஜகாளியம்மன், ஜேம்ஸ் பாண்ட், குபேரன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இது போல 2001-ஆம் ஆண்டு தாலி காத்த காளியம்மன், குட்டி, எங்களுக்கும் காலம் வரும் போன்ற படங்களில் நடித்த இவர் 2002-ஆம் ஆண்டு தேவன், திருமலை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 2009-ஆம் ஆண்டு வரை நடித்த இவர் இதனை அடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி நிற்கிறார்.

தேவைனா.. கல்யாணம் பண்ணுவேன்..

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாத கௌசல்யா அது பற்றி என்ன காரணம் என்று கேள்வி எழுப்பிய போது அண்மை பேட்டியில் சொன்ன இந்த விஷயம் இப்போ எனக்கு தேவை என்று படவில்லை.. என் வாழ்க்கை இப்படியே போகட்டும் என்று கூறியிருக்கிறார்.

அத்தோடு தனக்கு எப்போது பாதுகாப்பு வேணும் என்று நினைக்கிறாரோ? அப்ப கல்யாணம் பத்தி யோசிப்பதோடு நின்று விடாமல் திருமணமும் செய்து கொள்வேன் என்று நடிகை கௌசல்யா ஓபன் ஆக கூறி இருக்கிறார்.

கூச்சமின்றி பேசிய நடிகை கௌசல்யா..

இந்நிலையில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு அது போன்ற விஷயங்களில் நாட்டம் இல்லாததால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் கூறி வரக்கூடிய வேளையில் கூச்சமின்றி தனக்கு பாதுகாப்பு எப்ப வேணுமோ அப்போது தான் கல்யாணம் என்று கூறிய பேச்சானது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட ராமா? பாதுகாப்புக்காக கல்யாணம் பண்றாங்க.. வயசு போன எதுவுமே முடியாது என்பது போன்ற கமெண்ட்களை சொல்லி விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அவருக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து அவரது திருமணம் குறித்து அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது விரைவில் தெரியவரும். அப்படி ஒரு நிலையில் அவர் கட்டாயம் அதை தெரிவிப்பார் என்று ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் தற்போது கௌசல்யா கூச்சமின்றி பேசிய இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவு புகைந்துள்ளது என்றால் அதை மறுக்க முடியாது. எனவே இவரது ரசிகர்கள் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version