என்ன இருந்தாலும் மேடையில் மாதவன் இப்படி பேசியிருக்க கூடாது.. நடிகையின் புருஷன் நிலை என்னாகும்..?

நடிகர் மாதவன் ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய பணிகளை செய்து இருக்கிறார்.

இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்ததை எடுத்து நான்கு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று முறை தமிழக அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.

நடிகர் மாதவன்..

நடிகர் மாதவனின் திரை உலகப் பிரவேசமானது 2000 ஆவது ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார் இந்த படத்தின் வெற்றியை அடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, குரு போன்ற படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து அனைவரும் விரும்புகின்ற நடிகர்களில் ஒருவராக மாறினார்.

இந்நிலையில் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஊக்குவிக்க கூடிய வகைகளில் விருது வழங்கப்படுவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் சைமா விருதுகள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

திரை பிரபலங்களை கௌரவப்படுத்தக் கூடிய வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் மேடையில் நடிகர் மாதவன் நடிகை காவியா மாதவனிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கலாம் என்று கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேடையில் மாதவன் இப்படி பேசி இருக்கக் கூடாது..

இந்த சைமா விருது வழங்கும் விழாவில் மலையாள நடிகை காவியா மாதவனுக்கு மிகச் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதுவும் இவர் நடிப்பில் வெளிவந்த கடாமா என்ற திரைப்படத்திற்காக இந்த விருதினை காவ்யா மாதவன் பெற்றிருக்கிறார்.

மேலும் இந்த விருதினை இவருக்கு நடிகர் மாதவன் வழங்கினார் என்பது மிக குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த விருதை பெற்றுக் கொண்ட அவர் இந்த விருதை பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதோடு ஆரம்ப காலத்தில் திரை உலகில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசினார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் மலையாளத்தில் பேசுவதாக சொன்ன இவர் கொஞ்சும் தமிழில் மலையாளம் கலந்து பேசியது ஆச்சரியத்தில் தள்ளியது.

இதற்குக் காரணம் இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான சமயத்தில் மாதவன் டாப் நடிகராக இருந்ததாகவும் படப்பிடிப்புக்காக ஊட்டி வந்திருந்த சமயத்தில் அங்கு இருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தன்னை பார்க்க வந்து சென்றதை அடுத்து இவருக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னார்.

நடிகையின் புருஷன் நிலை என்ன ஆகும்..

இதனை அடுத்து தான் உண்மை தெரிய வந்தது தன்னோடு நடிகர் ஜெய்சூர்யா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்தவர். இவர் என்னை மாதவனின் மனைவி என்று கூறியிருக்கிறார். இதை நான் பலமுறை உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை இன்று அதை உங்களிடம் சொல்லிவிட்டேன் என்று கூறுகிறார்.

காவ்யா மாதவன் சொல்வதை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த மாதவன் உடனே நோ ப்ராப்ளம் எனக் கூறியதோடு நான் நடித்த முதல் படத்தில் ஒரு டயலாக் பேசினேன் அது என்னவென்றால் அட்ஜஸ்ட் பண்ணலாம் என்பது தான் என கூறினார்.

இதைக் கேட்டதும் நடிகை காவ்யா மாதவன் தலையில் கை வைத்த படி முகத்தை திருப்பிக் கொண்டார். அதனை அடுத்து மாதவனுக்கு நன்றி சொல்லி மேடையில் இருந்து இறங்கி விட்டார்.

இந்த வீடியோவானது youtube பக்கத்தில் 2020 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது எனினும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் என்ன இருந்தாலும் மேடையில் மாதவன் இப்படி பேசி இருக்கக் கூடாது என்று சொல்லி இருப்பதோடு நடிகையின் புருஷன் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் கேட்டு விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version