கணவர் மீது குத்த வைத்து நடிகை கயல் ஆனந்தி..! வேற லெவல் ரொமான்ஸ்..!

பிரபல இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கயல் ஆனந்தி.

இவர் பார்ப்பதற்கு பவ்யமான தோற்றத்தில் ஹோம்லியாகவும், சாதுவான பெண் கேரக்டரில் நடிப்பதற்கும் பக்கவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன் முதலில் இவர் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கயல் ஆனந்தி:

அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தாலும் மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையோ கொடுக்கவில்லை.

இதனால் தனது அடுத்தடுத்த முயற்சியை கைவிடாமல் கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த அளவுக்கு கயல் ஆனந்தி நடிப்பும் அவரது தோற்றமும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

கயல் படத்திற்கு பிறகு ஆனந்தியின் பெயர் கயல் ஆனந்தி என மாற்றிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

தொடர்ந்து விசாரணை , சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா , எனக்கு இன்னொரு பேர் இருக்கு , கடவுள் இருக்கா குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர் வெற்றிப்படங்கள்:

குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி மிகவும் பவ்யமான நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஜோதி மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தது நடிகை கயல் ஆனந்திக்கு பெயரையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது.

இன்று வரை இந்த திரைப்படம் நல்ல அடையாள படமாக அவருக்கு இருந்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக மார்க்கெட்டில் இருந்த போதே உதவி இயக்குனரான சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணம் திடீரென நடைபெற்றதால் ரசிகர்கள் பரவும் அதிர்ச்சியாகி அதற்குள் கயல் ஆனந்திக்கு திருமணம் ஆகிவிட்டதா? என எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் சாக்ரடீஸ்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கயல் ஆனந்துக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி.

இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் கூட அண்மையில் இணையத்தில் வைரல் ஆகியது.

கணவரின் மடியில் அமர்ந்து வாழ்த்து:

பொதுவாக தனது கணவர் மற்றும் குழந்தைகளை தனது சமூக வலைதளங்களில் வெளியிடாமல் தனிப்பட்ட விஷயமாக பாதுகாத்து வருகிறார்.

ஆனால் தற்போது தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மடியில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட அழகான ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘Happy birthday to my everything’ என பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

கயல் ஆனந்தியின் இந்த அழகான பதிவிற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version