இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட நடிகையான மேனகாவின் பெண். அத்தோடு இவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளராக இருந்ததோடு பல மலையாள திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தமிழ் திரைப்படத்திலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து அண்மையில் முத்த காட்சிக்கு நோ சொன்னதால் கை நழுவிய பட வாய்ப்பை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

மேலும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் ஒரு போல்டான கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததோடு உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாகவும் அமைந்தது.

இதனை அடுத்து கீர்த்தி சுரேஷ் சைரன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படம் தற்போது வெளி வந்து கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. மேலும் பல ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு போலீஸ் கேரக்டர் பொருத்தமாக இல்லை என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

முத்த காட்சியால் பறிபோன வாய்ப்பு..

இந்த சூழ்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்தப் படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சி இருந்ததால் அவரின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

மேலும் முத்த காட்சி இல்லாமல் இருந்திருந்தால் கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் நடித்திருப்பார். எனினும் அந்தப் படத்துக்கு முத்த காட்சி மிகவும் முக்கியமாக கருதப்பட்டதின் காரணத்தால் அந்த பட வாய்ப்பு கை நழுவி சென்றது.

இதை அடுத்து கீர்த்தி சுரேஷ் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது அந்த பாத்திரத்தில் நடிக்க முடியாது என்று தெளிவாக கூறி விட்டதாகவும், ஒரு பெரிய நடிகருடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அது கை நழுவி போய் விட்டதால் தெலுங்கு திரையுலகம் இவரை ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறது.

இதற்கு காரணம் இந்த நடிகரோடு இணைந்து நடிக்க பல நடிகைகள் ரவுண்ட் கட்டி நின்று வரக்கூடிய வேளையில் கீர்த்தி சுரேஷ் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் எனத் தெரிந்தும் நோ என்று சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இணையத்தில் தற்போது இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறிவிட்டது. கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் தற்போது இந்த விஷயத்தை பற்றி பெருமளவு பேசி வருகிறார்கள். மேலும் தற்போது கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் என்று தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version