இவரின் மகன் இவன் என சொல்வதை தாண்டி இவரின் தந்தை இவர் என தனுஷ் தனது அப்பாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஒரு மகனாக ஏற்படுத்திக் கொடுத்தார்.
சினிமாவில் படம் இயக்கி இயக்குனராக கஸ்தூரிராஜா புகழ்பெற்றிருந்தாலும் தன்னுடைய மகன் தனுஷின் பெயரால் தான் அவர் யாரென்று தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
தனுஷின் அப்பா:
அந்த அளவுக்கு தனுஷ் தனக்கு பெருமை சேர்த்திருப்பதாக பேட்டிகளில் கூட அவர் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல எழுதுனரான கஸ்தூரிராஜா,
பெரும்பாலும் கிராம பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதை எழுதி இளைஞர்களின் தடுமாற்றங்களை பற்றியே கதைகளை கூறுவார்.
தமிழ் சினிமாவில் கைதேர்ந்த இயக்குனர்களான கே எஸ் கோபாலகிருஷ்ணன், விசு ஆகியவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து படமெடுக்கும் நேர்த்திகளை கற்றுக்கொண்டு,
அதன் பிறகு ராஜ்கிரன் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குனர் ஆகியவர் தான் கஸ்தூரிராஜா. இவர் அந்த படத்தை தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புற பாட்டு, வீரத்தாலாட்டு,
எட்டிப்பட்டி ராசா, வீரம், விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உட்பட்ட பல்வேறு கிராம பாங்கான திரைப்படங்களை இயக்கி தனது படைப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
பெரும்பாலும் கஸ்தூரிராஜாவின் திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டாலே மண் மணம் வீசும் படங்களாகவே இருக்கும்.
கிராம படங்களை இயக்கி புகழ் பெற்ற கஸ்தூரி ராஜா:
இவருக்கு செல்வராகவன் தனுஷ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் செல்வராகவன் இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
தனுஷ் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்பட்டு வருகிறார். மகன் தனுஷின் அபார வளர்ச்சிக்கு பிறகு கஸ்தூரிராஜா படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கி நிம்மதியான மன நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது அந்த குடும்பம் மற்றும் மகன்களை பற்றி பேட்டிகளில் கூறுவார் அந்த வகையில் தற்போது, நடிகர் தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்:
அதில் அவர் பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரங்களுக்கு அதிக வலுவான காட்சிகள் இருக்கும்.
அவர்களுக்கு உண்டான ஸ்கிரீன் ஸ்பேஸ் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் நடிகைகள் விருப்பப்பட்டு என்னுடைய படங்களில் நடிக்க காத்திருப்பார்கள்.
அந்த வகையில் நடிகை குஷ்பு விடும் சென்று இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினால் போதும் எத்தனை நாள் கால் சீட் வேண்டும் என்று கேட்பார்.
ஏன் கதையெல்லாம் கேட்க மாட்டீர்களா என்று கேட்டதற்கு உங்களுடைய கதையில் கண்டிப்பாக என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வைத்து இருக்கும்.
அதனால்தான் என்னை அணுகி இருக்கிறீர்கள் என்னுடைய கதாபாத்திரத்துக்கு வெயிட் இல்லாமல் நான் எதுக்கு..?
சண்டைக்கு வந்த குஷ்பு:
நீங்கள் ஏன் என்னை அணுக போகிறீர்கள்..? என்று என்னை திட்டிவிட்டு.. அதனால் தான் கதையை நான் கேட்கவில்லை..
எத்தனை நாள் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என கூறினார் குஷ்பூ. அந்த அளவுக்கு நடிகைகள்,
என்னுடைய கதையின் மீதும் என்னுடைய படங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா.