நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளை பார்த்துள்ளீர்களா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான கே ஆர் விஜயா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் அந்த காலத்திலேயே “புன்னகை அரசி” என ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெருமை பாராட்டப்பட்டவர் கே ஆர் விஜயா.

“புன்னகை அரசி” கே ஆர் விஜயா:

திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதாவால் “விஜயா” என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

1960 களில் நடிக்கத் தொடங்கிய கே. ஆர். விஜய் சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த வெளிவந்த முதல் திரைப்படம் “கற்பகம்” 1963ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

 

அவரின் நடிப்பும் அவரது தோற்றமும் மக்களை வெகுவாக கவர்ந்தது . ஹோமிலியான கதாபாத்திரத்தில் மிகவும் பவ்யமான கேரக்டர்களில் நடித்து வந்தார்.

எமோஷனல் , காதல் என எல்லாவற்றிற்கும் பக்காவாக பொருந்தும் நடிகையாக கே ஆர் விஜயா தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடம் பெற்றார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன்,முத்துராமன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார் கே.ஆர். விஜயா.

நட்சத்திர நடிகர்களுடன் கே. ஆர் விஜயா:

மேலும், நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய்ஶ்ரீனிவாசன், ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.

பின்னர் வயதாக பல சின்னத்திரை நாடகங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து புகழ்பெற்றார். மேலும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அதிலும் தமிழக அரசால் காசநோய் விழிப்புணர்வு குறித்த எமர்ஜென்சி என்ற நாடகத்தில் கே. ஆர். விஜயா நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கே கே ஆர் விஜயா 1966 ஆம் ஆண்டு அன்றைய பிரபல தயாரிப்பாளராகவும் இருந்து வந்து சுதர்சன் எம் வேலாயுதம் நாயர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாம் தாரமா திருமணம்:

இவர் தனது கணவருக்கு மூன்றாவது தாரமாக சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே வராத கே ஆர் விஜயாவுக்கு “ஹேமலதா” என்ற ஒரு மகள் இருக்கிறார்.

நடிகை கே ஆர் விஜயாவின் கணவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி தான் கே. ஆர். விஜயா.

கே. ஆர். விஜயாவின் மகள்:

கணவர் வேலாயுதம் நாயர் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தற்போது கே ஆர் விஜயா தனது மகள் ஹேமலதா உடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் புதிய கார் ஒன்றை வாங்கிய போது எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் கே ஆர் விஜயாவின் மகளா இது? இம்புட்டு அழகா இருக்காங்களே என கமெண்ட் செய்து ஷேர் செய்து வைரல் ஆக்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version