குஷ்புவுக்கு என்ன ஆச்சு….? கட்டுடன் படுக்கையில் வெளியிட்ட போட்டோ – பதறிப்போன ரசிகர்கள்!

தென் இந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை குஷ்பூ. 53 வயதாகும் அவர் இப்போதும் தனக்கென தனி மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை குஷ்பு:

80ஸ் காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை குஷ்பூ தொடர்ந்து 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

பின்னர் 2000 கால கட்டத்தின் பிற்பகுதியில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

80களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கினார் நடிகை குஷ்பு.

1989 ஆம் ஆண்டு வருஷம் 16 தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதுதான் அவரது முதல் திரைப்படம்.

80ஸ் நட்சத்திர நாயகி குஷ்பு:

முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்ற அடுத்து குஷ்பூ அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தவிர்த்து கன்னட மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களில் நடித்த அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை குஷ்பூ நடிகை என்பதையும் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளியாகவும் நடுவராகவும் பணியாற்றி வந்தார் .

மேலும், பிரபலமான ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். ரிக்ஷா மாமா, சின்ன தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவரது மாபெரும் வெற்றி திரைப்படங்கள் ஆகும்.

பிரபுவுடன் முறிந்துபோன காதல்:

ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் திரைப்படங்களில் நடித்த போது நடிகர் பிரபுவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடிய முடிவில் கூட இருந்தனர்.

ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுவின் தந்தையையும் நடிகர் சிவாஜி கணேசன் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த காதல் நிறைவேறாமலே முடிந்து போனது. அதை எடுத்த நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் ஆன சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை குஷ்பூ அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார் .

அதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து அதில் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரபலமான கட்சி ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த நடிகை குஷ்பூ திடீரென அந்த கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

குஷ்புவுக்கு என்ன ஆச்சு…?

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை குஷ்பூ காலில் மிகப்பெரிய கட் போட்டுக் கொண்டு படுத்த படுக்கையாகவே எடுத்துக்கொண்டு போட்டோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தொடை வரை கட்டப்பட்டுள்ள க்ரிப் பேண்டுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் குஷ்பூவுக்கு என்ன ஆச்சு? என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் நான் மற்றும் என்னுடைய பெஸ்ட்டி மிகச்சிறந்த காம்போ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என அவருக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version