நடிகை லட்சுமி ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் பழம் பெரும் இயக்குனரான மல்லியம் ராஜகோபால் அவர்கள் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகத்திற்கு வந்தார்.
ஏற்கனவே நடிகை லட்சுமியின் பெற்றோர்களும் திரைத்துறையில் இருந்ததை அடுத்து திரையுலகில் நுழைவது இவருக்கு எளிதாக இருந்தது. எனினும் இளமை காலத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் இருந்தவர்.
நடிகை லட்சுமி..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1974-இல் வெளி வந்த சட்ட காரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தார்.
தென்னிந்திய மொழிகளோடு தனது நடிப்பை நிறுத்தி விடாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 1975-இல் ஜூலி என்ற ஹிந்தி படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
சின்னத்திரை, பெரிய திரை என்று இரண்டு திரையிலும் கலக்கி வந்த இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களை நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருப்பதோடு பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
37 வருஷமா ஹஸ்பண்டுக்கும் எனக்கும் அது வரல..
இந்நிலையில் திரைப்படங்களில் நடித்து வரும் போது தனது 17-வது வயதில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை செய்து கொண்டார். அந்த வகையில் பாஸ்கர் என்பவரை 1971-ஆம் ஆண்டு திருமணம் செய்ததை அடுத்து இவருக்கு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இதனை அடுத்து மலையாள படத்தில் நடித்த போது நடிகர் மோகனுடன் உறவு ஏற்பட்டு அதுவும் முறிந்து போன நிலையில் என்னுயிர் கண்ணம்மா எனும் படத்தில் நடித்த நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லட்சுமி எனக்கும் என் கணவருக்கும் 37 வருடங்களாக சண்டையே வந்தது கிடையாது.
இதற்கு என்ன காரணம் என்றால் என்னை நான் எப்போதும் அழகாக வைத்துக் கொள்வேன் என்னுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவேன். அதேபோல சின்ன சின்ன பிரச்சனைகளில் நான் கவனம் செலுத்த மாட்டேன் கடந்து விட்டு சென்று விடுவேன்.
கூச்சம் இல்லாமல் பேசிய நடிகை லட்சுமி..
அவரும் அப்படித்தான் திருமணமான பெண்கள் தங்களை எப்போதும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டிலும் கவனம் செலுத்தினால் சிறு, சிறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை அவர்கள் தவிர்த்து விடலாம்.
இது தான் என்னுடைய திருமண வாழ்க்கையில் சண்டை வராமல் இருப்பதற்கு காரணம் என பதிவு செய்திருக்கிறார் நடிகை லட்சுமி. இதனைத் தொடர்ந்து இந்த விஷயமானது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் சில பெண்கள் இவர் கூறிய டிப்ஸை ஃபாலோ செய்து அவர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க முயற்சி செய்ய இருப்பதாக சொல்லி இருப்பது பலர் மத்தியிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நீங்களும் நடிகை லட்சுமி சொன்ன கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா அல்லது இல்லையா என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து உங்கள் நண்பர்களோடு கலந்தவை ஆடலாமே.