Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா நான் எதுக்கு அழணும்..? – நடிகை லட்சுமியின் உருக்கமான பேச்சு..

தமிழ் திரை உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடிகை லட்சுமி நடித்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு பல படங்கள் நல்ல வெற்றிகளை பெற்று தந்தது.

அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் முதல் அனைவரும் விரும்புகின்ற நடிகைகளில் ஒருவராக நடிகை லட்சுமி மாறியதை அடுத்து பல படங்களில் ஹீரோயினியாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்து அனைவரையும் அசத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

நடிகை லட்சுமி..

நடிகை லட்சுமி தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் 1974 -இல் நடித்த மலையாள திரைப்படமான சட்டக்காரி என்ற திரைப்படம் தான் இவருக்கு மிகச்சிறந்த புகழை தேடித்தந்தது.

ஆரம்ப நாட்களிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் 1977-ஆம் ஆண்டு வெளி வந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தேசிய விருதினை பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

மேலும் இன்றைய இளைஞர்களை கவரக்கூடிய வகையில் இவரது நடிப்பு திறன் இருந்தது என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக 1980-களில் கதாநாயகியாக நடித்த அவர் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்தார்.

மேலும் ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்ததை நினைத்து இன்றைய தலைமுறையையும் கவர்ந்ததோடு சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சின்ன திரையில் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டை காட்சிகள் முத்திரை பதித்தார்.

மூன்று முறை திருமணம் செய்து கொண்ட இவர் சட்டப்படி விவாகரத்து பெற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பேட்டிகளுக்கு மிகவும் ஜெனரஞ்சக முறையில் பதில்களை அளித்து அனைவரையும் கவர்ந்து விடுவார்.

Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா..

அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த நடிகை லட்சுமி இடம் அவரது திரை துறை அனுபவங்கள் பற்றி கேட்கப்பட்டது.

அப்படிக் கேட்கப்பட்ட கேள்வியில் தனக்கு மறக்க முடியாமல் இருக்கக்கூடிய அனுபவங்களில் ஒன்றை அவர் விளக்கி கூறியதை அடுத்து அனைவரும் அசந்து போனார்கள்.

இதற்குக் காரணம் அந்த படத்தில் தன்னை லவ் பண்ணியவன் விட்டு விட்டு ஓடி விட்டதாக டைரக்டர் சீன்னை சொன்னதோடு மிக நன்றாக அழுது நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்.

இதனைக் இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகை லட்சுமி கடைசியில் லவ் பண்ணியவன் விட்டுட்டு போயிட்டானா நான் ஏன் அழனும் என்ற கேள்வியை முன் வைத்ததை அடுத்து காண்டாகி போன டைரக்டர் அவரை திட்டி இருக்கிறார்.

எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டதை அடுத்து கடுப்பாக்கிப் போன டைரக்டர் தான் என்ன சொல்கிறோமோ? அதை செய்ய வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அழுகின்ற காட்சியில் அழுகை நன்றாக வர வேண்டும் என்பதற்காக வெங்காயத்தை கண்ணில் தேய்த்துக் கொண்டு எல்லாம் அழுகையை வர வைக்க கூடாது.அது எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

எதுக்கு அழணும்.. லட்சுமியின் உருக்கமான பேச்சு..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி தன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் எதுக்கு அழுக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அந்த இயக்குனரோடு தர்க்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் கடைசியில் ஒரு வழியாக அதற்கு ஒப்புக்கொண்டேன் என்ற தகவலை கூறினார்.

 

இதனை அடுத்து இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் லவ் பண்ணியவன் விட்டுட்டு போனா எதுக்கு அழுக வேண்டும் என்ற கேள்வியை நடிகை லட்சுமி அன்றே வைத்து விட்டார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணைத்தில் அதிகளவு பார் பேசப்படுகின்ற விஷயத்தில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முதல் காதல் என்பது கட்டாயம் இருக்கும். அப்படி இருந்தால் அந்த காதலரை நீங்கள் விட்டு விலகும் போது உங்களுக்குள் எப்படி மனநிலை இருந்தது. நீங்களும் லட்சுமியை போல் அழ மாட்டேன் என்று உறுதியாக இருந்தீர்களா?

இல்லை இன்று வரை அதை நினைத்து உங்கள் மனதுக்குள் வேதனைப்பட்டிருக்கிறீர்களா? என்ற விஷயத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாமே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version