சொல்வதெல்லாம் உண்மை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக மாறிய நபர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் செய்யும் கட்டப்பஞ்சாயத்து பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை .எனினும் இந்த நிகழ்ச்சியை அதிக அளவு மக்கள் பார்த்து இவருக்கு ஆதரவை தந்து வருகிறார்கள்.
இவர் தென் இந்திய சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று அதிகளவு நடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரின் சொல்வதெல்லாம் உண்மை கட்டப்பஞ்சாயத்து ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..
பன்முகத் தன்மையைக் கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஆர் யூ ஓகே பேபி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பற்றி youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனைகளை பகிர்ந்திருக்கிறார்.
அதில் எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் போது இயக்குனர் ஷாஜி கைலாசம் நடிகர் மனோஜ் கே ஜெயின் அண்ணனும் நான் அவர்களை தாண்டி சென்ற போது தன்னை பார்த்து கிண்டல் செய்ததாக கூறினார்.
மேலும் நக்கலாக கமாண்டுகளை செய்த போது உடனே நான் திரும்பி அவர்களிடம் சென்று சொல்ல வேண்டிய வார்த்தைகளை சொல்லிவிட்டேன்.
அந்த உறுப்பில் லைட் அடிச்சார்.. டார்ச்சர் பண்ணார்..
அப்படி அது மாதிரியான வார்த்தைகளை நான் சொன்ன பிறகும் அவர் என்னை டார்ச்சர் செய்தது இருக்கிறதே வார்த்தையால் சொல்ல முடியாது. நான் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்த போது என் கையில் தட்டினார்.
இதனை அடுத்து என் முகம் மாறி ஏதோ ஒரு ரியாக்ஷன் கொடுத்ததால் அவருக்கும் எனக்கும் இடைவெளி வந்தது. இதன் பின் என் முகத்தில் லைட் அடிக்காதீர்கள் நகர்த்தி வையுங்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை.
அத்தோடு தேவையில்லாத காட்சிக்கு 10 டேக் வரை எடுக்க வைத்து டார்ச்சர் செய்தார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து 10 டேக் வரை தன்னை நடிக்க வைத்து டார்ச்சர் பண்ணிய விவரத்தை சொன்ன அவர் இப்படிப்பட்ட அனுபவத்தை அவர் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்பதையும் கூறி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
இயக்குனர் மீது லட்சுமி பகீர் குற்றச்சாட்டு..
மேலும் இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பகிர் குற்றச்சாட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் சொல்வதெல்லாம் உண்மையை வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலையை இப்படி என்றால் மற்றவர்கள் பற்றி என்ன சொல்ல முடியும் என்று பேசி வருகிறார்கள்.
மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் தக்க பதிலடி அந்த சமயத்தில் பெண்கள் கொடுப்பது இது போன்ற அவலங்கள் தொடர்ந்து அரங்கேறுவதற்கு வாய்ப்புகள் குறையும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்களில் இந்த விஷயம் ஒன்றாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போல்டாக இந்த விஷயத்தை பகிர்ந்ததற்கு அவரை பாராட்டியும் வருகிறார்கள்.