நான் உன்னோட படுத்து.. உன்னோட எழுந்திருக்கணும்… பிரபலத்திடம் டபுள் மீனிங்கில் பேசிய நடிகை லட்சுமி..!

தமிழ் திரை உலகில் பழம்பெறும் இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக இருக்கும் மல்லியம் ராஜகோபால் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை தான் நடிகை லட்சுமி.

நடிகை லட்சுமி திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பதை விட சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்வு காணும் கூடிய கருத்துள்ள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

நடிகை லட்சுமி..

இவர் ஆரம்ப காலத்தில் நடிக்க வருவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். எனினும் நடிகையாக மாறிய இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட இவர் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் முத்திரை பதித்தார். இந்த நிகழ்ச்சியானது தனி மனித அவலங்களை வெளிக் கொண்டு வந்து காட்டக் கூடிய நிகழ்ச்சியாக திகழ்ந்தது.

உன்னோட படுத்து.. உன்னோட இருக்கணும்..

திரை உலகத்தில் இருந்தபோதே தனது 17 ஆம் வயதில் பாஸ்கர் என்பவரை திருமணம் புரிந்த இவருக்கு 1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் திரையுலகில் நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி பிரபல நபர் ஒருவரிடம் டபுள் மீனிங்கில் பேசிய பேச்சானது தற்போது இணையங்களில் வைரலாகளாக பேசப்பட்டு வருகிறது அப்படி எந்த பிரபலத்திடம் அவர் டபுள் மீனிங் என்ன பேசினார் என்பது பற்றி இனி பார்க்கலாம்.

டபுள் மீனிங் பேசிய நடிகை லட்சுமி..

தமிழ் நடிகை லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அதில் பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களிடம் டபுள் மீனிங்கில் கலாட்டா செய்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார். 

அவர் கூறியதாவது ஒருமுறை எஸ்பிபி இடம் சென்று சார் நான் உங்களோடு படுத்து உங்களோடு எழுந்திருக்கணும் சார் என்று கூறினேன். 

இதைக் கேட்ட எஸ்பிபி ஆடிப் போய்விட்டார்.. ஹே ச்சி.. என்ன பேசுற நீ.. என்று மிரண்டு போனார். அதன் பிறகு நான்.. சார்.. நீங்கள் ஏன் தவறாக நினைத்துக் கொள்கிறீர்கள்..?

 நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே.. தினமும் காலையில் உங்களுடைய சுப்ரபாதம் கடவுள் பக்தி பாடல்களை கேட்டு தான் எழுந்திருக்கிறோம். 

இரவு படுக்கும்போது உங்களுடைய பாடல்களை கேட்டு தான் தூங்குகிறோம். அதனால் தான் இப்படி கூறினேன் என்று கூறினேன். 

அதன் பிறகு எஸ்பிபி என்னை பார்த்து இவள் என்னென்ன பேசுகிறார் பாருங்கள் என்று அருகில் இருந்தவர்களிடம் என்னுடைய கலாட்டாவை பற்றி கூறினார் என பேசி இருக்கிறார் நடிகை லட்சுமி. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version