61 வயசிலும் குறையாத அழகில் பிரபல நடிகை..! புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை மாதவி. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை மாதவி.

இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ், ஒரியா உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை மாதவி:

தன்னுடைய 17 வருட நடிப்பு தொழிலில் இதுவரை சுமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

1976 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம் அதே 1996 ஆம் ஆண்டுகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த நடிகை மாதவி பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வந்தார்.

சிறந்த நடிகை என்பதையும் தாண்டி பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்திய புகழ்பெற்றவர் ஆக இருந்து வந்தார்.

பதின்ம வயதிலேயே தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களோடும் மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.

ரஜினி ஜோடியாக அறிமுகம்:

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இவர் தில்லு முல்லு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம்.

அந்தப் படத்தை தொடர்ந்து மாதவிக்கு சினிமாவில் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க ஆரம்பித்தது அதற்கு முக்கிய காரணமே ரஜினியாக தான் பார்க்கப்பட்டார்.

தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, காக்கி சட்டை உள்ளிட்ட பல படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து வெற்றிகளை குவித்து வந்தார்.

வசீகர பார்வை, கவர்ச்சி அழகு, மாநிற தோற்றத்தில் மயக்கும் நடிகை என ரசிகர்களை வசீகரித்து இழுத்தார்.

1996 ஆம் ஆண்டு ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மாதவிக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

இப்போது மாதவி குடும்பத்துடன் நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு அழகிய மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் செட்டில்:

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. டிபானி சர்மா, பிறிசில்லா சர்மா, ஈவலின் சர்மா உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளனர்.

நடிகை மாதவியின் அழகிய புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வர்ணித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version