எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஏமாத்திடுவாங்க.. ஜாங்கிரி மதுமிதா புலம்பல்..!

திரைப்படங்கள் என்றால் ஆக்சன், ரொமான்ஸ் உடன் காமெடியும் இடம் பிடித்திருந்தால் அந்த படம் கட்டாயம் வெற்றி பெற்று ரசிகர்களின் மத்தியில் பேசப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக விளங்கும் ஜாங்கிரி மதுமிதா பற்றி உங்களிடம் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஜொள்ளுசபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ்பெற்றவர். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஜாங்கிரி மதுமிதா..

திரைப்படத்தை பொருத்தவரை 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் மிக சிறப்பாக காமெடியை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது கிடைத்தது.

 

இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டில் மிரட்டல் படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த அட்டகத்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு கண் பேசும் வார்த்தைகள், சொன்னா புரியாதா, ராஜா ராணி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

2014-இல் ஜில்லா, நளனும் நந்தினியும், தெனாலிராமன், வெள்ளைக்காரத்துரை போன்ற படங்களில் நடித்த இவர் 2015-இல் காக்கி சட்டை, முனி 3, இருடியம், டிமான்டி காலனி, ஸ்ட்ராபெரி, லட்டுக்குள் பூந்தி, புலி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 

2018-இல் காத்தாடி, ஸ்கெட்ச், பேய் இருக்கா இல்லையா, மோகினி, பட்டினப்பாக்கம், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சியில் மாமா மாப்பிள்ளை, பொண்டாட்டி தேவை, அத்திப்பூக்கள், அழகி, மடிப்பாக்கம் மாதவன், காமெடி ஜங்ஷன் போன்றவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஏமாத்திடுவாங்க..

இதனை அடுத்து ஜாங்கிரி மதுமிதா எங்கு சென்றார் என்று கேட்கக்கூடிய அளவு திரைப்படங்கள் இருந்து காணாமல் போன அவர் கடந்த ஆண்டு குழந்தை பெற்ற நிலையில் யோகி பாபு நடித்த போர்ட் படத்தில் முக்கிய கேரக்டரை செய்திருந்தார்.

இந்நிலையில் இவர் பட ப்ரமோசனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் நான் அதிகமாக கோபப்படக்கூடிய கேரக்டர் நான் ரொம்ப கஷ்டப்பட்டது எதுக்கு என்றால் ஒரு முறை உழைத்த உழைப்புக்காக எனது காசை தராமல் சில கம்பெனி நபர்கள் ஏமாற்றினார்கள்.

 

எனவே அந்த காசை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று ட்ரை பண்ணும் போது கொஞ்சம் கோபப்பட வேண்டி இருந்தது இதை சிலர் பார்த்து நான் அதிகமாக பேமெண்ட் கேட்கிறேன் என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.

ஜாங்கிரி மதுமிதா புலம்பல்..

 

இப்படி காமெடி நடிகையான ஜாங்கிரி மதுமிதா புலம்பிய புலம்பலானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் கோபப்பட்டது நியாயம் உள்ளது என பேசி வருகிறார்கள்.

இதை அடுத்து இணையதள வாசிகள் அனைவரும் இந்த விஷயத்தை அதிகமாக தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருவதால் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்கள் ஒன்றாக மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version