கூப்பிட்டு போவாங்க… காசு கொடுக்கமாட்டாங்க… சினிமாவில் நடக்கும் கோல்மால் – நடிகை மதுமிதா காட்டம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஜாங்கிரி மதுமிதா தான். நடிகையாக அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்

அந்த அளவுக்கு இவரது காமெடி கதாபாத்திரம் மக்களை சென்று அடைந்தது. குறிப்பாக இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானார் .

ஜாங்கிரி மதுமிதா:

இப்படி சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மதுமிதா தான் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

குறிப்பாக சந்தானம் மதுமிதாவிடம் காதலில் வழியும் காட்சியும் அதை பார்த்து உதயநிதி கிண்டல் அடிக்கும் காட்சிகளும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பிரபலமான காமெடி காட்சியின் மூலமாக மதுமிதா மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்கள் இடையே ஃபேமஸ் ஆகிவிட்டார் .

முன்னதாக இவர் நடிகை ஆவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார் .

அதன் மூலம்தான் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பே தேடி வந்தது. அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரிலும் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இவரது முதல் திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது .

அதை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் மதுமிதாவுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.

சென்னையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை மதுமிதா பார்ப்பதற்கு சீரியல் நடிகை போற்று இருப்பார். 49 வயதாகும் இவர் பார்ப்பதற்கு இளம் நடிகை போன்றே இருப்பார் .

திரைப்படங்களில் மதுமிதா:

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மிரட்டல், அட்டகத்தி, கண் பேசும் வார்த்தைகள் ,சொன்னா புரியாது ,ராஜா ராணி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நலனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தெனாலிராமன் , வெள்ளைக்கார துரை, காக்கி முட்டை , முனி 3, டிமான்டி காலனி, புலி, திருநாள், காஷ்மோரா , கவலை வேண்டாம், சரவணன் இருக்க பயமேன், கொஞ்சம் கொஞ்சம் போன்ற படங்களில் காமெடி நடிகையாக நடித்து அசத்தியிருக்கிறார்.

ஸ்கெட்ச், காத்தாடி ,இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் , விஸ்வாசம், இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துபெரும் புகழ் பெற்றார்.

காமெடி நடிகையாக நடிகை மதுமிதா வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார் .

அதன் மூலம் மேலும் பிரபலமாகினார் ஜாங்கிரி மதுமிதா. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜாங்கிரி மதுமிதா படத்தின் ப்ரோமோஷனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே அதிகமாக கோபப்படுவேன் என கூறினார் .

நான் பெரும்பாலும் அதிகமாக கோபப்படுவேன். ரொம்ப கஷ்டப்பட்டது எதுக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா ஒருமுறை உழைத்த உழைப்பிற்கான காசு சில கம்பெனி தராமல் ஏமாத்துறாங்க .

எப்படியாவது வாங்க ட்ரை பண்ணும் போது கொஞ்சம் கோபப்பட வேண்டி தான் இருக்கு. படத்துல நடிக்க அவங்களாவே வாய்ப்பு கொடுத்து கூப்பிட்டு போவாங்க.

கூப்பிட்டு போவாங்க… காசு கொடுக்கமாட்டாங்க…

அந்த படத்தின் நடித்து முடித்து அவங்களுக்கு தேவையான உழைப்பை நம்ம கொடுத்தாலும் கூட அதுக்கான தக்க ஊதியம் நமக்கு கொடுக்க மாட்டாங்க .

கேட்கிற டைம்ல அதை ஏமாற்றி இழுத்து அடிப்பாங்க . அந்த சமயத்தில் எனக்கு ரொம்ப அதிகமா கோபம் வரும் .அப்படி ஒரு டைம் நான் கோபப்பட்டு பேசின போது தான் நான் அதிகமா பேமெண்ட் கேட்கிறேன் அப்படின்னு புரளி கெளப்பி விட்டுட்டாங்க .

அதனால எனக்கு இன்னும் கோவம் அதிகமாகிடுச்சு. சினிமா துறையில் இது காலம் காலமா நடந்துட்டு வருது.
எனவே இது போன்ற கோல்மால் விஷயம் நடிகர்களாகிய எங்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது என அதுமிதா இந்த பேட்டியில் கூறியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version