பெண்கள் என்றாலே அவர்களுக்குள் ஈகோ பிரச்னை எக்கச்சக்கமாய் இருக்கும். வீட்டுக்குள் அக்கா – தங்கை, அண்ணி – நாத்தனார், மாமியார் – மருமகள் மற்றும் தோழிகள் என இரண்டு பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் நான் பெரியவளா, நீ பெரியவளா என்ற கர்வம்தான் அவர்களது எல்லா மோதலுக்கும், பிரிதலுக்கும் முக்கிய காரணமாக மாறுகிறது.
அந்த வகையில் சில நடிகைகள், சில நடிகைகள் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க மாட்டார்கள். இந்த பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சில நேரங்களில் வருவதுண்டு.
ஆனால் ஆண்கள் கூட ஒரு கட்டத்தில் அனுசரித்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களை பொருத்த வரை இந்த ஈகோ பிரச்னையில் எப்போதுமே அவர்கள் உடும்புப் பிடியாக தான் இருப்பார்கள்.
வானத்தைப் போல
சன் டிவியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் மிக முக்கியமானது வானத்தைப் போல. இந்த சீரியலில் மான்யா ஆனந்த் மற்றும் செந்தில்குமாரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தங்கள் இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக ஒரு நேர்காணலில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
சீரியல்களில் பெரும்பாலும் இந்த ஈகோ பிரச்னையை வைத்துதான் கதையே ஓட்டுகின்றனர். இந்த நிலையில் சீரியலில் நடிப்பவர்களுக்குள் இப்படி எல்லாம் ஈகோ வரும் என்று யோசிக்க தான் வேண்டியிருக்கிறது.
மான்யா ஆனந்த்
வானத்தை போல சீரியலில் நடித்து பிரபலமான நடிகை மான்யா ஆனந்த் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் சிலவற்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
செந்தில் குமாரி
அந்த பேட்டியில் அவருடன் பசங்க திரைப்படத்தில் நடித்த பிரபலமான நடிகை செந்தில்குமாரியும் கலந்து கொண்டார்.
முதலில் பேசிய செந்தில் குமாரி, படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் மான்யா ஆனந்த் குட்மார்னிங் சொல்லாமல் அவளுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தால், நான் அவருடன் பேசவே மாட்டேன்.
இதையும் படியுங்கள்: ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!
குட்மார்னிங் சொல்லாமல்…
நானும் பொறுத்து இருந்து பார்ப்பேன். கடைசி வரை குட் மார்னிங் சொல்லாமல் விட்டு விட்டால் படப்பிடிப்பிற்கு வந்ததும் வச்சி செய்து விடுவேன். ஒரே டேக்கில் காட்சியை முடிக்கவில்லை என்றால் பயங்கரமாக திட்டுவேன்.
ஏன் நீ மீண்டும் மீண்டும் இருக்க, என்னை ஏன் டென்ஷன் பண்ற என்று அன்று நாள் முழுதும் மானியாவை கடுப்பாக்கி கொண்டே இருப்பேன் என கூறினார்.
45 நிமிடங்கள் தேவை
தொடர்ந்து பேசிய மான்யா ஆனந்த், நான் வேண்டுமென்றே குட் மார்னிங் சொல்லாமல் இருக்க மாட்டேன். நான் படப்பிடிப்பு தளத்திற்கு சீக்கிரம் வந்து விடுவேன். ஆனால் நான் தயார் ஆவதற்கு குறைந்தபட்சம் 40 முதல் 45 நிமிடங்கள் தேவைப்படும்.
புடவை கட்ட வேண்டும். சிகை அலங்காரம் செய்ய வேண்டும். மேக்கப் போட வேண்டும். ஆனால் இவருக்கு சாதாரண புடவை, சாதாரண மேக்கப் தான். ஒரு பத்து நிமிடத்தில் தயாராகிவிடலாம்.
இதையும் படியுங்கள்: திரிஷா இந்த 3 ஹீரோக்களுடன் தொடர்பில் இருக்கா.. விழா மேடையில் பிரபல தயாரிப்பாளர் காட்டம்..!
எப்படி தயாராக முடியும்
யோசித்து பாருங்கள். தினமும் அனைவருக்கும் குட் மார்னிங் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி என்னால் தயாராக முடியும். மற்றபடி வேண்டுமென்றே யாரையும் நான் தவிர்க்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார் மான்யா ஆனந்த்.
அந்த கேரக்டர்ல நடிக்கற நடிகை 10 நிமிஷத்துல டிரஸ் பண்ணி, மேக்கப் பண்ணி முடிச்சுடுவாங்க.. எனக்கு அதுக்கு 45 நிமிஷம் வேணும்.. என்று மான்யா ஆனந்த் வெளிப்படையாக சொன்னாலும், அதுல குட்மார்னிங் சொல்ல 2 செகண்ட் ஒதுக்க கூடாதா, இதை ஒரு பிரச்னையா எடுத்துட்டு வந்து பேசறீங்களே என்றுதான் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.