தொளதொள டீசர்ட்.. டைட்டான ஜீன்ஸ்.. மாடர்ன் உடையில் மனசை மயக்கும் மீனா..! குவியும் லைக்குகள்..!

90ஸ் காலத்தில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை மீனா. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன்,அஜித், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மீனா நடித்தாலே அந்த படம் ஹிட்டாகிவிடும் என தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நம்பி மீனாவை படங்களில் புக் செய்தார்கள்.

குழந்தை நடிகையாக மீனா:

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் நடிகை மீனா .

முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசனின் “நெஞ்சங்கள்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான மீனா குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அதன் பிறகு மிகவும் இளம் வயதிலேயே ஹீரோயினாக ஆகிவிட்டார். இவர் ஹீரோயின் ஆன பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் ஒவ்வொரு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படங்களாக பார்க்கப்படுவது அன்புள்ள ரஜினிகாந்த், ஆனந்த பூங்காற்றே, எஜமான், என் ராசாவின் மனசிலே, சிட்டிசன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

மீனாவின் வெற்றி திரைப்படங்கள்:

மேலும் கூலி, வானத்தைப்போலே, வில்லன் ,மாயி, முத்து, மரியாதை, பொற்காலம் ,பெரியண்ணா, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களாக பார்க்கப்பட்டது .

நட்சத்திர நடிக்கையாக வலம் வந்த நடிகை மீனாவை ஒரு காலகட்டம் வரை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ற அளவுக்கு தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

இதனால் மற்ற நடிகைகள் சினிமாவில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார்கள். நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்துக் கொண்டிருந்தபோது 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நடிகை மீனாவிற்கு நைனிகா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தார். திருமணம் குழந்தைக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகை மீனா.

மீனாவின் மகள் நைனிகா தெறி திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு மகளாக அவர் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்தார்.

தெறி பேபி:

இந்த திரைப்படம் நைனிகாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்பபடத்திற்கு பிறகு தெறி பேபியாகவே அவர் அடையாளம் காணப்பட்டு வருகிறார்.

மேலும், பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்திலும் நைனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே அவரது கணவர் திடீரென நுரையீரல் தொற்று காரணமாக மரணம் அடைந்து விட்டார்.

கணவரின் மரணத்திற்குப் பிறகு அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த மீனா சில நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

அதன் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்ற திரைப்படங்களில் நடிக்க ஆசையும் ஆர்வமும் வந்துவிட்டது.

மாட்டார் உடையில் மயக்கும் மீனா:

அதற்காக தன்னை முழுமனதோடு தயார்படுத்திக் கொண்டு வருவதால் நடிகை மீனா அதன் ஒரு பகுதியாக தான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் .

இந்நிலையில் தற்போது தொளதொள டீசர்ட்.. டைட்டான ஜீன்ஸ் அணிந்து மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து மீனாவா இது? என ரசிகர்களே வாய் பிளந்துவிட்டார்கள். மீனாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களும் வியந்து போய்விட்டனர்.

47 வயசிலும் இவ்வளவு அழகாக இருக்கிறாரே மீனா….இன்னொரு ரவுண்டு வந்தால் கூட அவரது திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெறும் என அவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version