முன்னணி நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை மீனா..! இதென்ன புது கூத்தா இருக்கே..!

1982ல் வெளியான நெஞ்சங்கள் என்கிற திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக முதன்முதலாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீனா. 1982ல் மட்டும் அவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் சினிமாவில் வெளியானது.

அந்த நான்கு திரைப்படங்களிலும் குழந்தை கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் மீனா. தொடர்ந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் வாய்ப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே சென்றது. 1984 இல் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார் மீனா.

குழந்தை கதாபாத்திரமாகவே பிரபலம்:

அந்த வருடம் மட்டும் எட்டு திரைப்படங்களில் மீனா நடித்திருந்தார். இப்படி குழந்தை கதாபாத்திரமாகவே அதிகமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகியாக நடித்த தொடங்கினார் மீனா. கதாநாயகியாக அவர் நடிக்க தொடங்கிய பிறகு அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

அந்த திரைப்படத்தில் சோலையம்மா என்கிற மீனாவின் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அந்த படத்தின் வெற்றிக்கு மீனாவின் நடிப்புதான் முக்கிய காரணமாக இருந்தது. மிக சிறு வயதிலேயே அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து மீனாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய பெரும் நடிகர்களுடன் நடிக்க துவங்கினார் மீனா. தமிழில் பெரிய நடிகர்களான கார்த்திக், ரஜினி, கமல் என்று பலருடனும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மீனா ரஜினி கமல் மாதிரியான நடிகர்களோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிறகு சினிமாவிற்கு வந்த நடிகர் அஜித்துக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் மீனா.

இளம் நடிகையாக வரவேற்பு:

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிப்பது என்பது சிலருக்கு மட்டுமே அமையக்கூடிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் மீனா வெகு காலங்களாகவே இளம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் இருந்து வந்துள்ளார்.

மீனா திரையுலகில் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவர் குறித்து கிசுகிசுக்கள் என்று பெரிதாக வந்தது கிடையாது. ஆனால் அவரை குறித்து ஒரு காதல் செய்தி அப்பொழுது வலம் வந்து கொண்டிருந்தது.

டபுள்ஸ் என்கிற திரைப்படத்தில் மீனா நடிக்கும்போது அவர்கள் ஜோடியாக பிரபுதேவா நடித்து கொண்டிருந்தார். பிரபு தேவா வெகு காலங்களாகவே சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் மீனாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தது.

அந்த படத்திலேயே கூட இருவரும் நிறைய நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். ஆனால் பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை பிரபுதேவா கொஞ்சம் மோசமான ஆள் என்று மற்ற நடிகைகள் மீனாவிடம் கூறி இருக்கின்றனர். இந்த தகவலை அறிந்த மீனா பிறகு பிரபு தேவாவை விட்டு விலகி விட்டாராம் அதற்கு பிறகு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version