அமைச்சருடன் தகாத தொடர்பு உண்மையா..? நடிகை மீனா கொடுத்த பதில்..! அதிரும் இண்டர்நெட்..!

பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. பெரும்பாலும் மீனா நடிக்கும் திரைப்படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.  சிறு வயது முதலே மீனா தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக மீனா நடிக்க துவங்கிய பிறகு பல வருடங்கள் அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் மீனாவின் தனிப்பட்ட நடிப்புதான் என்று கூறப்படுகிறது.

மீனாவின் வளர்ச்சி:

அதே போல தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுகளுக்கு உள்ளாகாத ஒரு நடிகையாக மீனா இருந்திருக்கிறார் எப்போதுமேதான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதுதான் மீனாவின் பழக்கமாக இருந்திருக்கிறது. என்னதான் ரஜினி,கமல் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட மீனா மிகவும் அடக்கமானவர்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களிடம் மட்டும் பழகாமல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களிடம் கூட நன்றாக பழகக் கூடியவர் மீனா இந்த நிலையில் மீனா குறித்து ஒரு குற்றச்சாட்டு எழுந்து சமீபத்தில் அது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் பா.ஜ.கவில் முக்கிய நபரான திருச்சி சூர்யா அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியல் பிரச்சனை:

இந்த நிலையில் இது குறித்து பேசிய திருச்சி சூர்யா பேசும் பொழுது அதில் மீனாவை குறிப்பிட்டு சில விஷயங்களை பேசி இருந்தார். மீனாவை நேரடியாக அவர் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அவர் குறிப்பிட்டது மீனாவைதான் என்று கூறப்படுகிறது.

அதில் பாஜகவை சேர்ந்த பல பிரமுகர்களை குறித்து விமர்சித்த திருச்சி சூர்யா கூறும் போது பாஜகவின் அமைச்சர் எல்.முருகன் பொங்கல் விழாவை நடத்திய பொழுது அதில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்பொழுது அந்த விழாவில் ஒரு முக்கிய நடிகையும் கலந்து கொண்டார்.

அந்த நடிகைக்கும் எல் முருகனுக்கும் தொடர்பு உண்டு என்று பேசி இருந்தார் சூர்யா. ஆனால் அந்த நடிகை யார் என்று அவர் கூறவில்லை இந்த நிலையில் அந்த நடிகை மீனாதான் என்று பேச்சுக்கள் எழ துவங்கி இருந்தன. இது குறித்து பலவாறு பேச்சுகள் இருந்த நிலையில் மீனா அது குறித்து ரிப்ளை ஒன்றை எக்ஸ் தளத்தில் கொடுத்திருந்தார்.

அதில் அவர் ரூமர் என்பது பிடிக்காதவர்களால் உருவாக்கப்படுகிறது மூடர்களால் பரப்பப்படுகிறது மேலும் மூடர்கள் தான் அதை ஏற்றுக் கொள்கின்றனர் என்று பதிவிட்டிருந்தார். அதை மீனாவின் ரசிகர்களின் அக்கவுண்டாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்த வகையில் அந்த எக்ஸ் தளத்தின் பதிவிற்கு குஷ்பு பதில் அளித்து இருந்தார், இதனை தொடர்ந்து இது மீனாவின் அதிகாரப்பூர்வ அக்கவுண்டாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version