என் அம்மா தான் காரணம்.. நான் எதிர்பாக்கவே இல்ல.. நடிகை மீனா குமுறல்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை மீனாவை கண்ணழகி என்றே ரசிகர்கள் அழைத்தார்கள்.

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து வளர்ந்த பின் ஹீரோயினியாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை மீனா..

மேலும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு நடிக்க ஆரம்பித்தவர். பின்னால் ரஜினிகாந்துக்கு ஜோடியாக படங்களில் இணைந்து நடித்து கலக்கியவர்.

இதையும் படிங்க: சடலத்துடன் விடிய விடிய படுத்திருந்தேன்.. நீலிமா ராணி வெளியிட்ட பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மேலும் ரஜினியோடு இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி தந்ததை அடுத்து இவர்களுக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி வேறு லெவலில் இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.

திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இவர் விஜய் உடன் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக செய்து வைக்கப்பட்டார்.

அம்மா சொன்ன வார்த்தையால் மிஸ் பண்ணினேன்..

கொரோனா காலகட்டத்தில் இவரது கணவர் நுரையீரல் நோயால் 2022 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து மிகுந்த சோகத்தில் இருந்த மீனா தற்போது அந்த சோகத்தில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வந்து சின்னத்திரைகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

தற்போது பேட்டி ஒன்றில் பேசிய மீனா தனது கேரியரில் பெரிய வெற்றி பெற்ற போதும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாமல் போனது மனதுக்கு வருத்தமாக உள்ளது என்ற விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

சினி உலகம் என்ற you tube சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் இந்த விஷயத்தை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார். மேலும் அம்மா சொன்ன ஒற்றை வார்த்தையால் தான் அந்த படத்தை தவற விட்டு விட்டேன் எனக் கூறியது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீனாவின் குமுறல்..

இதற்கு காரணம் அம்மா சொல்வது எப்போதும் சரியாக இருக்கும். ஆனால் ஒரு முறை தவறாக போய்விட்டது என்று நினைக்கிறேன். படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்கிறீர்களா? என்று என்னிடம் முதலில் கேட்டார்கள். அம்மா தான் அதற்கு சம்மதிக்கவில்லை.

காரணம் ரஜினியோடு பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நெகட்டிவ் கேரக்டர் ஒத்து வராது. அப்படி நடித்தாலும் அது ரசிகர்களின் மத்தியில் உன் இமேஜை டேமேஜ் செய்யும் என்று அம்மா கூறினார்.

இதையும் படிங்க: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

எனவே தான் அதில் நடிக்க நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் அந்த கேரக்டரை ரம்யா கிருஷ்ணன் செய்து மிகச்சிறந்த பெயரை பெற்று விட்டார். எனக்கு ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரை செய்வது பற்றி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

ஒரு நடிகை என்ற விதத்தில் வித்தியாசமான கேரக்டர்களை செய்து இருக்க வேண்டும். அத்தோடு சவால் நிறைந்த கேரக்டரை நழுவ விட்டு விட்டேன்.

இதனை எண்ணி பல முறை நான் கவலைப்பட்டு உள்ளேன். அம்மா சொன்னதை கேட்காமல் இந்த படத்தில் நடித்திருக்கலாமோ.. என்று கூட சில சமயம் நான் நினைத்ததுண்டு என்ற உண்மையை கூறியதை அடுத்து இந்த விஷயம் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version