“ஓல டம் டம்.. ஒத்துக்கு டம் டம்…” – தோழியுடன் குத்தாட்டம் போட்ட நடிகை மீனா..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை மீனா தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு எனிமி திரைப்படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த டம் டம் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

90களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை மீனா பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடி எடுத்து வைத்த இவர் 90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னக மொழிகள் அனைத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் என சீனியர் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என தனது தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் வரை ஜோடி போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இவருக்கு திருமணம் ஆகி நைனிகா என்ற மகள் இருக்கிறார். தற்பொழுது நைநிகாவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் துரதிர்ஷ்டவசமாக நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு நோயால் மரணம் அடைந்தார்.

இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். இதனால் சில காலம் பொதுவெளியிலும் மீடியா வெளிச்சத்திலும் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகை மீனா.

இந்நிலையில் பழைய மீனாவை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை என்று தான் கூற வேண்டும்.

காரணம் நடிகை மீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.. மிகவும் சிறியது. அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற சோகம் இருக்க வேண்டியது தான்.. ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருப்பது நிச்சயமாக வாழ்க்கை நரகமாகிவிடும்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நடிகை மீனா மீண்டும் தன்னுடைய இயல்பான வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு மால டம் டம் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Meena’s latest reels video on Dum Dum Songs has taken the internet by storm. The viral video has been viewed and shared thousands of times across social media platforms, making it one of the most talked about topics.

ஆண்களின் அந்த உறுப்பு.. பெண்களுக்கு ஏற்படும் கிரஷ்.. இது தான் உண்மை.. ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்..!

Comments are closed.
Tamizhakam