நடிகை மீனா இரண்டாவது திருமணம்..! அவரே கூறிய தகவல்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை மீனா.

இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

90களில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வந்த மீனா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

கொடிகட்டி பறந்த நடிகை மீனா:

முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார். சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின்னர். ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

சிறு வயதிலே திரைப்படங்களில் நடித்து வந்ததால் மீனா கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இவர் அவ்வை ஷண்முகி, அன்புள்ள ரஜினிகாந்த், ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, என் ராசாவின் மனசிலே, எஜமான், ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, கூலி சிட்டிசன் தாய்மாமன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வெற்றி திரைப்படங்கள்:

அத்துடன் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களான வில்லன், வீரா, வானத்தைப்போல ,முத்து, பெரியண்ணா நாடோடி மன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக் கொண்டோம் ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு. வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

கணவர் மரணம்:

இதனிடையே இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் கொரோனா காலகட்டத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார்.

அதன் பிறகு மீனாவின் மறுமண செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. குறிப்பாக பிரபல நடிகரான தனுஷ் மற்றும் பெரிய இயக்குனர்கள் , தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் மீனாவுக்கு தொடர்ச்சியாக திருமணம் நடைபெற போவதாக மாதம் ஒருமுறை செய்தி வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து மீனா மிகுந்த வருத்தத்தை கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் மீனா பிரபல நடிகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து மீனா கூறி இருப்பதாவது, இரண்டாவது திருமணம் பற்றி நான் எதுவுமே இதுவரை சிந்திக்கவே இல்லை.

மறுமணம் குறித்து பளீச்:

இந்த செய்தி குறித்து பலமுறை பலமுறை விளக்கம் அளித்த போதும் இந்த வதந்தி ஓய்ந்த பாடே கிடையாது. என்று மறுமண செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் உண்மையை மட்டும் சொல்லுங்கள். அது நல்லது. நாட்டில் என்னை போல் தனிமையில் வாழும் பெண்கள் பல பேர் இருக்கிறார்கள்.

அந்த பெண்களின் பெற்றோர், குழந்தைகள் பற்றியும் தயவுசெய்து கொஞ்சமாவது யோசிங்கள்.

இப்போது என்னுடைய இரண்டாம் திருமணம் பற்றி எந்த சிந்தனையும் எனக்கு இல்லவே இல்லை.

எதிர்கால முடிவு குறித்து எப்படி சொல்ல முடியும்? எனவே இரண்டாவது திருமணம் குறித்து வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தி மட்டுமே.

யாருமே நம்ப வேண்டாம் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை மீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version