கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!

இயக்குனர் பாலு மகேந்திரா உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனிகா. நடிகை மௌனிகாவிற்கு சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே பாலு மகேந்திராவை சந்திக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.

பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோகனிகா.

அதனை தொடர்ந்து பாலு மகேந்திராவை சந்தித்து பேசியிருக்கிறார். பிறகு இவர் நடிகை ஆவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டவராக இருந்ததால் பாலு மகேந்திரா இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

பாலுமகேந்திராவுடன் காதல்:

இந்த நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை பாலு மகேந்திராவிற்கும் மௌனிகாவிற்கும் இடையே ஒரு தனிப்பட்ட காதல் உறவு இருந்து வந்துள்ளது. பாலு மகேந்திராவை ஆரம்பம் முதலே காதலித்து வந்தார் மௌனிகா.

அதனை தொடர்ந்து பாலு மகேந்திராவிடம் சென்று உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு பாலு மகேந்திரா உனக்கும் எனக்கும் வயது மிகவும் அதிகம். நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது.

எனது பையனை விடவும் உனக்கு ஒரு ஐந்து வயதுதான் அதிகமாக இருக்கும். உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார் மேலும் என்னுடைய முதல் மனைவி என் மீது கொலை வழக்கெல்லாம் போட்டு இருந்தார்.

வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம்:

இதெல்லாம் தெரிந்தும் நீ என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறாயே என்று கூறி இருக்கிறார் பாலு மகேந்திரா. ஆனாலும் மௌனிகா பிறகு பாலு மகேந்திராவை திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதற்கு நடுவே பாலுமகேந்திரா ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்ததன் காரணமாக பாலு மகேந்திராவிற்கும் மௌனிகாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் பிரிந்து இருந்தனர்.

இந்த நிலையில் பாலு மகேந்திராவின் கடைசி காலகட்டங்களில் அவர் தனித்து தான் இருந்தார். அப்பொழுது அவர் மௌனிகாவிடம் இரண்டு சத்தியங்கள் வாங்கி இருந்தார். அது என்னவென்றால் பாலுமகேந்திராவின் இறப்பிற்கு பிறகும் மௌனிகா படங்களில் நடிக்க வேண்டும்.

மேலும் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். ஆனாலும் அவர் இறப்பிற்கு பிறகு இன்னொரு திருமணத்தை மௌனிகா செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இறுதி நாட்களில் பாலு மகேந்திராவை பார்ப்பது என்பது மௌனிகாவிற்கு கடினமான விஷயமாக இருந்தது.

ஏனெனில் அப்பொழுது அவரிடம் உதவி இயக்குனராக பாலா பணிபுரிந்து வந்தார். அவர் தொடர்ந்து மௌனிகாவை நிராகரித்து வந்தார் பாலு மகேந்திராவின் இறப்பில் கூட மௌனிகா வரக்கூடாது என்று பாலா ரௌடிகளை வைத்து எல்லாம் மிரட்டி இருக்கிறார்.

இருந்தாலும் திரைத்துறையினால் தொடர்ந்து உதவியாளர் மௌனிகா பாலு மகேந்திராவின் இறப்பில் கலந்து கொண்டார். இப்படி பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டது முதலே பல இன்னல்களை சந்தித்துள்ளார் நடிகை மௌனிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version