நக்மா மீது ஆசைப்பட்ட பிரபல ரவுடி..? இண்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார் மாதிரியான பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

அவருக்கு அப்போது வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது. இவர் தமிழில் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரியாவார். இவர் நடித்த பாட்ஷா, காதலன் மாதிரியான பல படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

பிரபலமான நடிகை:

ஒரு காலத்தில் உட்காருவதற்கு கூட நேரமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தவர் நக்மா. இவரின் வரவேற்பை பார்த்து ஹிந்தி தெலுங்கு மொழிகளிலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அங்கும் சென்று ஒரு கலக்கு கலக்கி விட்டுதான் வந்தார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் காதலன் திரைப்படம் மூலமாகதான் அறிமுகமானார். காதலன் திரைப்படத்திலேயே அவருக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகள் இருந்தது. அதற்கு பிறகு அவருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் பாட்ஷா.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் கதாநாயகியாக நக்மா நடித்தது அவரது மார்க்கெட்டையை உயர்த்திவிட்டது என்று தான் கூற வேண்டும். மேட்டுக்குடி, பிஸ்தா மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பாலிவுட்டில் பிரபலம்:

இவர்களது காம்போவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் சிட்டிசன் திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கியது. அதற்கு பிறகு போஜ்புரி திரைப்படங்களில் நடித்தார் நக்மா. அது அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் பிறகு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார் நக்மா.

இந்நிலையில் நக்மா குறித்து செய்யாறு பாலு ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார். நக்மாவின் தாயாரின் முதல் கணவருக்கு பிறந்தவர்தான் நடிகை நக்மா. சில காலங்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிறகு நக்மாவின் தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த ஜோடிக்கு பிறந்தவர்தான் நடிகை ஜோதிகா. நக்மாவின் இரண்டாவது தந்தை தான் அவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். பாலிவுட்டில் நக்மா நடித்துக் கொண்டிருந்த பொழுது அவர் மீது பலர் ஆசைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் அப்பொழுது ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடைய டைரியில் நான் இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் ஒரு நாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும் என்று அவர் எழுதியிருந்ததாக கூறப்பட்டது. அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதேபோல சர்வதேச அளவிலான தாதா ஒருவருடன் நக்மா தொடர்பில் இருந்ததாகவும் அப்போதே பேச்சுக்கள் இருந்தன என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version