50 வயசு.. ஆனா இன்னும் அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக சொன்ன நக்மா..!

தமிழ் திரையுலகில் 1993 முதல் 1997ஃ-க்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை நக்மா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

நந்திதா மொரார்ஜி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

50 வயசு ஆனா..

தற்போது 50 வயதை தொட்டிருக்கும் நடிகை நக்மா மராட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர். இதனை அடுத்து இவர் ஹிந்தி, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர். 

தமிழைப் பொறுத்த வரை இவர் ரஜினிகாந்த் ஒரு இணைந்து நடித்த பாட்ஷா திரைப்படம் இவருக்கு நல்ல பேமஸை பெற்று தந்தது. அதுமட்டுமல்லாமல் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார். 

இதனை அடுத்து காதலன் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் களம் இறங்கி அதிரடி காட்டி வரும் நக்மா பல்வேறு தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர். 

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு, சிட்டிசன், தீனா போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் இவரை பற்றிய சிந்தனைகளை தூண்டும் படி உள்ளது. 

நடிகை நக்மா தற்போது 50 வயதை எட்டி இருந்தாலும் இன்று வரை முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் இவர் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்.

மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை இன்றுவரை ஏற்பட்டது இல்லை என்றும் தான் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.

இன்னும் அந்த ஆசை இருக்கு..

அப்படி முரட்டு சிங்கிளாக இருக்கும் நக்மாவுக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அந்த ஆசை அதாவது திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனை அவரே அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்ததை அடுத்து அட இந்த வயதில் கூட உங்களுக்கு அந்த ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் கேட்டிருப்பதோடு ஆச்சிரியத்தோடு அவரை பார்த்து வருகிறார்கள். 

எப்போதுமே பெண்களுக்கு நல்ல கணவரோடு வாழ்ந்து பிள்ளை குட்டி என என பெற்றுக் கொண்டு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நக்மாவுக்கும் அது போல எண்ணம் இருப்பது தவறு இல்லை எனினும் காலம் கடந்த ஞானம் என்று இதை சொல்லலாம்.

வெளிப்படையாகச் சொன்ன நக்மா..

ஆனால் காலம் கடந்து விட்டது என்பதை பற்றி கூட கவலைப்படாமல் நக்மா இனியாவது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக மனது விரும்புவதை வெளிப்படையாக சொன்னதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் ரசிகர்கள் இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

இதனை அடுத்து நக்மாவிற்கு வரக்கூடிய மாப்பிள்ளை எப்படி இருப்பார் அவருக்கு வயது எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்களை பற்றி தனது கற்பனை குதிரைகளை தட்டி விட்டு சிந்திக்க கூடிய நிலையில் ரசிகர்கள் தள்ளிவிடப்பட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version