50 வயசாகியும் நக்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நக்மா. மும்பையை சேர்ந்த நடிகை நக்மா மும்பையில் இருந்து வாய்ப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார்.

நடிகை நக்மா ராஜஸ்தானில் உள்ள ஒரு பிசினஸ்மேனின் மகள்தான் நக்மா என்று கூறப்படுகிறது. 1974 இல் பிறந்த நக்மா இளம் வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நக்மாவின் அம்மா ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

நடிகை நக்மா

எனது அப்பா அம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ஆனால் அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் விவாகரத்து செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு நக்மாவின் அம்மா ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த தயாரிப்பாளருக்கும் நக்மாவின் அம்மாவுக்கும் பிறந்தவர்கள்தான் நடிகை ஜோதிகா மற்றும் அவரது சகோதர சகோதரிகளான சுவராஜ் மற்றும் ரோஷினி ஆகியோர்.

50 வயசாகியும் இன்னும் திருமணம் ஆகல.

அப்பா வேற வேறயாக இருந்தாலும் இருவரின் தாயாரும் ஒருவர்தான் என்பதால் இவர்கள் சகோதர சகோதரிகளாகவே இருந்து வருகின்றனர் இந்த நிலையில் காதலன் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நக்மா.

1994 இல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்றது.

இதுதான் காரணம்

அந்த நேரத்தில் தமிழில் மிக அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக நக்மா இருந்தார். ரகசிய போலீஸ், பிஸ்தா, வில்லாதி வில்லன், சிட்டிசன் மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்தார் நக்மா. அவருக்கு சிட்டிசன் திரைப்படம் கம்பேக் படம் என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் அதற்கு முன்பு சில வருடங்கள் வாய்ப்பில்லாமல் இருந்ததார் நக்மா. ஆனால் சிட்டிசன் படத்திற்கு பிறகும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு வேறு மொழிகளில் முயற்சி செய்தார். இறுதியாக அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலில் இறங்கிவிட்டார் நக்மா.

இந்த நிலையில் சிறுவயதிலேயே தனது தாய் தந்தையர் சண்டை போட்டுக் கொண்ட விவாகரத்து பெற்றதை பார்த்த நக்மாவிற்கு திருமணம் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் இத்தனை வருடங்களாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நக்மா.

கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கி விட்ட நக்மா இப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவர் அரசியலின் மீது ஈடுபாடு காட்டி வருகிறார். இதற்கு நடுவே தமிழில் இவர் பிரபலமாக இருந்தபோது நடிகர் சரத்குமாருக்கும் இவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. அதனால்தான் சரத்குமார் முதல் மனைவி அவரை விவாகரத்து செய்ததாகவும் ஒரு பக்கம் கிசுகிசுக்கள் இருந்து வந்தன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version