ரொமான்ஸ் பண்ணி முடிச்ச அப்புறம் அண்ணா’ன்னு கூப்பிடுன்னு சொன்னார்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி.

இவர் 90களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.

நடிகை நளினி:

இவர் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

அதேபோல் தமிழில் விஜயகாந்த், சத்யராஜ், மோகன் இப்படி பல ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவர் சினிமாவையும் தாண்டி சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ் பெற்று வந்தார்.

குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

திரைப்படங்களில் வயதான பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வந்து தற்போது வரை மார்க்கெட் இழக்காமல் இருந்து வருகிறார்.

நடிகை நளினி ஏழாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

இதனிடையே 1987ல் பிரபல நடிகரான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

ராமராஜனுடன் காதல் திருமணம்:

1988 ஆம் ஆண்டு அருணா மற்றும் அருண் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். மிகச் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த இவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி மனப்பூர்வமாக காதலித்து வந்தாலும் கூட,

இருவருக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு மனக்கசப்பு காரணமாக கடந்த 2000 ஆண்டு விவாகரத்து செய்து இருவரும் பிரிந்து விட்டார்கள்.

திருமணமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகியும் கூட அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை.

சமீபத்திய பேட்டிகளில் நளினி தனது கணவரை மிகவும் மரியாதையோடும் அவர் மீது வைத்துள்ள,

அன்பை குறித்து வெளிப்படையாக பேசி வருவதால் இவர்கள் மிகச் சிறந்த காதலர்களாக இருக்கிறார்கள்,

எனவே இவர்கள் மீண்டும் இணைந்து வாழ்ந்து தங்களது வாழ்க்கை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு கருத்து கூறுகின்றனர்.

விவாகரத்து:

அந்த அளவுக்கு இவர்கள் தங்களை காதலை வெளிப்படுத்த வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் உடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார் நடிகை நளினி.

ஆம், நடிகை நளினி சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் எப்போதுமே கேப்டன் விஜயகாந்தை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை பாசமாக தங்கை போல தான் பார்த்துக் கொண்டார்.

ஆனால், நாங்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அமைந்து விட்டது. மறுக்காமல் அதனை ஏற்று நடத்துவோம்.

ஆனால் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது மட்டும் எனக்கும் கேப்டனுக்கும் ஒத்து வரவே இல்லை நிறைய டேக் வாங்கினோம்.

விஜயகாந்த் உடன் ரொமான்ஸ்:

ஏனென்றால் ஒரு அண்ணன் தங்கை என உறவு முறையிலேயே பழகிவிட்டோம். அதன்பிறகு ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றால் எப்படி முடியும்? மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் தயவு செய்து ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் அண்ணானு கூப்பிடாதே அதுதான் காட்சிகள் சொதப்புவதற்கு காரணமாக இருக்கிறது.

நீ எதையும் சொல்ல வேண்டாம் அவர்கள் சொல்வதை நடித்து விடு.. இப்படி செய்யுங்கள் அண்ணா.. அப்படி செய்யுங்கள் அண்ணா.. என்று கூறாதே என்னால் நடிக்க முடியவில்லை.

ரொமான்ஸ் காட்சிகள் முடிச்ச பிறகு அண்ணா என கூப்பிட்டுக்கோ என்று கூறினார்.. அதன் பிறகு,

அவர் சொன்னபோது செய்தேன் காட்சிகள் படமாக்கி முடித்தோம் என பதிவு செய்திருக்கிறார் நடிகை நளினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version