தன்னுடைய உடல் குறித்து தப்பான கமெண்ட்.. நடிகை நமிதா கொடுத்த பதிலடி..!

சினிமாவில் நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியை தாறுமாறாக அள்ளித் தெளித்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் கவர்ச்சி அழகால் கட்டி இழுத்தவர்தான் நடிகை நமீதா .

இவர் தமிழ் மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை நமீதா:

திரைப்படங்களில் ஹீரோயின் கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் எந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் பரவாயில்லை என குணச்சித்திர வேடங்களில் கூட படு கவர்ச்சியான கிளாமரை வெளிக்காட்டி நடித்து ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழ் சினிமா இளவட்ட ரசிகர்களை மச்சான் என தனது மயக்கும் குரலால் அழைத்து நமீதா மிகப்பெரிய அளவில் அவர்களின் மனதில் இடத்தை பிடித்தார் .

குறிப்பாக மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று தென்னிந்திய சினிமா அளவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து இவருக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது. முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படம் தான் .

சினிமாவில் கொடிகட்டி பறந்த நமீதா:

2002 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன் பிறகு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை நமிதா எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலமாக 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ்காரன், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன் ,பில்லா ,பாண்டி, இந்திர விழா ,உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் தன்னுடைய தாறுமாறான கவர்ச்சி வெளிப்படுத்தி நடித்தது தான் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது.

கவர்ச்சி கன்னியாக நமீதா:

நமிதா என்றாலே கவர்ச்சி கவர்ச்சி என்றாலே நமீதா என்ற அளவுக்கு அன்றைய காலத்தில் கொழுக் மொழுக் அழகியாக வலம் வந்து கொண்டு இருந்தார் நடிகை நமீதா .

இதனிடையே மார்க்கெட் குறைய அவர் சினிமாவில் சில ஆண்டுகள் இல்லாமல் போனார். அதன் பிறகுபிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மீண்டும் தனது அறிமுகத்தை கொடுத்தார் நடிகை நமீதா.

இந்த நிகழ்ச்சி அவருக்கு மீண்டும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நடிகை நமிதா கடந்த 2017 ஆம் ஆண்டு விரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர் ஒரு தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நடிகை நமிதா .

திருமணம் குழந்தை என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நடிகை நமீதா. தற்போது தனது உடல் எடை குறித்தும் பாடி ஷேமிங் பற்றி மோசமான கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆம் தன்னுடைய உடல் மிகவும் பருமனாக இருப்பதை பற்றிய கசப்பான அனுபவத்தை பற்றி பேசியிருக்கும் நடிகை நமீதா, என்னுடைய உடலில் சமநிலை அற்ற ஹார்மோன் பிரச்சனை உள்ளது.

மற்றவர்களுக்கு அது தெரியாது அதை பற்றி அவர்களிடம் சொன்னால் கூட அது சாதாரணமான விஷயம் தானே அப்படின்னு ரொம்ப ஈஸியா சொல்லிட்டு போய்டுவாங்க.

உடல் எடை கிண்டல் குறித்து பதிலடி:

இது எனக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுத்துடுச்சு… ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் அப்படித்தான் நான் கலந்துக்கிட்ட போது என்னோட உடல் எடை புகைப்படத்தை க்லோசப்பா காட்டி அந்த இடத்தை அசிங்கமாக காட்டியிருந்தாங்க .

இந்த விஷயம் எனக்கு மனசு அளவுல ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்துச்சு. அது மட்டும் இல்லாம நான். அதனால 25 கிலோ வரைக்கும் உடனடியாக எடை குறைத்துவிட்டேன்.

இதைப் பற்றி நான் என் கணவரிடம் கூறி புலம்புவேன். தவறாக பேசும் நபர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று என் கணவர் கூட எனக்கு ஆதரவா இருப்பாரு.

ஆனால் நான் தான் அதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொல்லிடுவேன் என நமீதா மிகுந்த வருத்தத்துடன் கூறியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version