இது தான் எங்களுக்கு அது நடக்க காரணம்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் விரைவில் ஹீரோயினியாக வருவது புதிதான ஒன்றல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகள் விரும்புகின்ற நபர்களில் ஒருவராக இன்று வரை இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகை நீலிமா தேவி..

இவரது அருமையான நடிப்பை குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே 1992-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார்.

மேலும் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பான துணை நடிகையாக நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் இவரது குணசத்திர நடிப்பை வெளிப்படுத்தியது.

சின்னத்திரையை பொருத்த வரை மெட்டிஒலி சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் கோலங்கள், புதுமை பெண்கள், தென்றல், இதயம், செல்லமே போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுதான் எங்களுக்கு நடக்க காரணம்..

சினிமாவை தாண்டி சீரியல்களிலும் சாதித்து காட்டிய இவர் இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நீலிமா ராணி அண்மை பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்த சில விஷயங்களை ஓபன் ஆக பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் இவர் திருமணம் செய்து கொண்ட இசைவாணனை இவருக்கு 20 ஆண்டுகளாக தெரியும் என்றும் தனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர் தான் என்றும் எங்களுக்குள் இருக்கக்கூடிய புரிதலுக்கு முக்கிய காரணமே வயது வித்தியாசம் தான் என்பதை ஓபன் ஆக சொல்லிவிட்டார்.

அது மட்டுமல்லாமல் இவர்கள் இடையே இருக்கக்கூடிய வயசு வித்தியாசம் தான் ஒருவரை பக்குவமாகவும் மற்றொருவர் அரைகுறையாக இருந்தாலும் அதை சமாளித்து செல்லக் கூடிய மனநிலையை தருவதாக சொல்லி இருக்கிறார்.

கூச்சமின்றி ஓபன் டாக்..

மேலும் இருவருமே பக்குவமாக இருந்தால் வாழ்க்கை சிக்கலாகிவிடும். அதனால் கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் இருக்க வேண்டும். அது தான் மிகவும் நல்லது என்ற கருத்தை நீலிமா ராணி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கணவன் மனைவி இடையே இரண்டு அல்லது மூன்று வயது வித்தியாசத்தை மட்டுமே எதிர் பார்த்து வரும் இந்த புதிய தலைமுறைக்கு இவர் சொன்ன விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஒருவருக்கு வயது அதாவது கணவருக்கு வயது அதிகமாக இருக்கும் போது அவர் விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படாது என்பதை சூசகமாக சொல்லியிருக்கும் இவரது பேச்சானது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் அதிக அளவு ரசிகர்களால் படிக்கப்படுவதால் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version