இதனாலேயே என்னோட புருஷன் கூடவே இருப்பார்.. அதெல்லாம் சகஜமா நடக்கும்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி…!

தமிழ் சினிமாவில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரம் ஒன்று சர்ச்சையான காட்சிக்கு தேவைப்படுவதாக இருக்கும்.

அப்படியான காட்சிகளை எல்லாம் படமாக்க இந்த நடிகைகளை தான் அழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்களது பெயர் கூட மக்களுக்கு தெரியாது என்றாலும் அந்த காட்சிகளில் வரும் பொழுது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று பார்ப்பார்கள்.

சர்ச்சை நடிகை:

அப்படியாக சினிமாவில் நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை நீலு நஸ்ரின். நீலூ நஸ்ரின் நிறைய திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமாகி இருக்கிறார். முக்கியமாக ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

சிங்கம் புலி திரைப்படத்தில் ஜீவா ஒரு பிளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பொழுது அதில் ஒரு காட்சியில் அவரிடம் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார் நீலு நஸ்ரின். அதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படம்தான் என கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது கூட அந்த திரைப்படத்தில் எனக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று இயக்குனர் கூறவே இல்லை என்னை வைத்து படபிடிப்பை எடுத்த பிறகு மொத்தமாக காட்சிகளை மாற்றி அமைத்து விட்டார் என்று பேசியிருந்தார்.

சினிமாவில் வரும் தொல்லை:

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது சினிமாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது படப்பிடிப்பு தளங்களில் படப்பிடிப்புகள் மட்டுமின்றி சாதாரண பெண்களுக்கு நிறைய தொந்தரவுகள் நடக்கின்றன என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் நீலு நஸ்ரின்.

மேலும் இதுபோன்ற விஷயங்களை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன் இதன் காரணமாகதான் நான் படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது எப்பொழுதுமே எனது கணவரை அழைத்துக் கொண்டுதான் செல்வேன். இதனால் எனக்கு அந்த மாதிரியான தொல்லைகள் வந்தது கிடையாது என்று கூறியிருக்கிறார் நீலு நஸ்ரின்.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்பது மக்களுக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் அதை இவ்வளவு வெளிப்படையாக நீலு நஸ்ரின் கூறியிருப்பது அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version