தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை சுகன்யா சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு ஆர்த்தி தேவி என்ற இயற்பெயர் உள்ளது.
தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் போது பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு செய்து வைக்கப்பட்டார்.
நான் குழந்தையை பெத்துக்கிட்டா..
தனது முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கிறார்.
இதை திரைத்துறையில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பாக பொதிகை தொலைக்காட்சியில் நடைபெற்ற பெப்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து தான் இந்த நிகழ்ச்சியானது சன் டிவியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற பெயரில் உமாவால் தொகுத்து வழங்கப்பட்டது.
இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், கேப்டன், மகாநதி, சேனாதிபதி, இந்தியன் போன்ற படங்கள் திரையுலகம் உள்ள வரை இவர் பெயரை சொல்லக் கூடிய வகையில் உள்ளது.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த சத்யராஜ், சரத்குமார், ரகுமானுடன் ஜோடி போட்டு நடித்த இவர் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்றவர்களோடு நடித்து வெற்றி படங்களை தந்தவர்.
இதுதான் நடக்கும்..
இதனை அடுத்து ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுதினை வென்றிருக்கக்கூடிய இவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபாலன் என்பவரை 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவரது மண வாழ்க்கை சரியாக இல்லாத காரணத்தை அடுத்து கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மண முறிவு பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் 50 வயதை கடந்து இருக்கக்கூடிய நடிகை சுகன்யா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் பேசி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நடிகை சுகன்யா பேச்சு..
இதற்குக் காரணம் தனது முதல் திருமணத்தை அடுத்து இவருக்கு பிள்ளை குட்டி ஏதும் இல்லாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தை இவரை அம்மா என்று அழைக்குமா? அல்லது பாட்டி என்று அழைக்குமா? என்று நகைச் சுவையோடு பேசி இருக்கிறார்.
எனினும் நாளொன்று போனால் வயதொன்று போகும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் 50 வயதை தொட்டு விட்ட பிறகு ஒரு துணை கட்டாயம் தேவை என்பதை சொல்லி இருக்கக் கூடிய இவரது பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
மேலும் நடிகை சுகன்யா நான் குழந்தை பெற்று கொண்டால் இது தான் நடக்கும் என்று வேடிக்கையாக பேசிய பேச்சானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.