உயிர் வாழவே கஷ்டப்பட்டேன்.. நோயால் படுத்த படுக்கையான தங்கலான் நடிகை.. இப்போ இருக்கிறது மறுப்பிறவி..

மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பார்வதி திருஓத்து. பார்வதியை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்கிற ஒரு மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது பார்வதிக்கு அதிகமாக வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமே அவருக்கு சிறப்பாக நடிக்க தெரியும் என்பதுதான், ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்கு தரும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் பார்வதி.

தங்கலான் நடிகை

2008 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலில் பூ திரைப்படத்தில் மாரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அந்த படத்தில் வெகுவாக பேசப்பட்ட கதாபாத்திரமாக மாறிய கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்குகிறது.

தமிழில் சென்னையில் ஒருநாள், மரியான் மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் பார்வதி. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பொழுது எக்கச்சக்கமான ரசிகர்களையும் பெற்றார் பார்வதி. பிறகு உத்தமவில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக இவர் நடித்திருந்தார்..

உயிர் வாழவே கஷ்டப்பட்டேன்

தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற்று வந்த பார்வதி தற்சமயம் தங்கலான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

இவர் தமிழில் எவ்வளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறாரோ அதைவிட அதிகமாகவே மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். கொரோனா சமயத்தில் இவருக்கு உடல் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இப்போ இருக்கிறது மறுப்பிறவி

அதில் கூறும் பொழுது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தேன். படுக்கையை விட்டு என்னால் எழுந்திருக்கவே முடியாது. எனது கைகளை பயன்படுத்தி என்னால் பல் துலக்க முடியாது அந்த அளவிற்கு மோசமாக இருந்தேன்.

என்னால் வாழ முடியும் என்கிற நம்பிக்கையே எனக்கு அப்பொழுது இல்லாமல் இருந்தது. மேலும் முக்கியமாக மற்றவர்களின் உதவி எனக்கு அதிகமாக தேவைப்பட்டது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன்.

அந்த கட்டத்தை எப்படி தாண்டி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அதை தாண்டி வந்த பிறகுதான் இந்த வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது.

நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அந்த நிலைக்கு சென்று விட்டு வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி இருக்கிறார் பார்வதி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version