டூ பீஸ் உடையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்..! படப்பிடிப்பில் நடந்த அலங்கோலம்..!

1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூர்ணிமா. 1981ல் வெளியான நெஞ்சில் ஒரு முள் திரைப்படத்தில் மாதவி என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அந்த வருடமே அவரது நடிப்பில் கிளிஞ்சல்கள் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வருடங்களில் எல்லாம் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை பூர்ணிமா.

தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, தாய் மூகாம்பிகை, பரீட்சைக்கு நேரமாச்சு போன்ற திரைப்படங்களில் நடித்தார் இந்த சமயங்களில் இவருக்கும் நடிகர் மோகனுக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் மோகனுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிறகு அவர் மோகனை விட்டு பிரிந்துவிட்டார்.

இயக்குனருடன் காதல்:

1982 இல் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் டார்லிங் டார்லிங் டார்லிங் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்பொழுது இயக்குனர் பாக்கியராஜ் மேல் அவருக்கு காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் பூர்ணிமா. ஆனால் 1985 க்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடிகை அம்பிகாவுடன் இணைந்து ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் சிவகுமாருடன் நடித்த அனுபவம் குறித்து பேசியிருந்தார். அதில் கூறும்போது “ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்தோம்.

நீச்சல் உடையில் வந்த பிரச்சனை:

அப்பொழுது நீச்சல் குளத்தை சுற்றி நாங்கள் பேசிக் கொண்டிருப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சிவக்குமாருடன் பேசும் பொழுது நான் நீச்சல் உடையில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.

ஆனால் நான் நீச்சல் உடை எல்லாம் போட மாட்டேன் என்று கூறிவிட்டேன் இதனால் சிவகுமாருக்கு நீச்சல் உடையை அணிந்து அந்த காட்சியை படமாக்கினர். இப்போது வரை சிவகுமார் என்னை பார்க்கும் பொழுது நீ அந்த உடையை அப்போது போடாததால் என்னை போடச் சொல்லி படபிடிப்பை நடத்திவிட்டார்கள் என்று சிரித்தப்படி கூறுவார்” என்று கூறியிருந்தார் பூர்ணிமா.

மேலும் இது குறித்து அம்பிகா கூறும்போது படத்தில் கமிட் ஆகும்பொழுது இது மாதிரி நீச்சல் உடை காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டுவிட்டுதான் நாங்கள் கமிட்டாவோம். ஏனெனில் படப்பிடிப்பு துவங்கிய பிறகு நீச்சல் உடைகளில் நடிக்க மாட்டோம் என்று கூறினால் அந்த கேரக்டருக்கு நீச்சல் உடை போட்டாக வேண்டும் என்று கூறி படத்தில் இருந்து எங்களை நீக்கிவிடுவார்கள் என்கிறார் அம்பிகா.

இந்த மாதிரி சில படங்களில் நீச்சல் உடையை தவிர்த்து விட்டு பிறகு அதனால் இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறோம் என்று கூறுகிறார் நடிகை பூர்ணிமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version