தென்னிந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் குடும்பத்தின் முதல் தலைமுறை நடிகர் ஆர் முத்துராமன்.
ஆர் முத்துராமனின் மகன் கார்த்தி நடிகராக இருந்தார். பிறகு கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் என்று மூன்று தலைமுறைகளாக இவர்கள் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளனர். ஏ.வி.எம் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆள் இல்லாமல் அதற்காக சென்று நடிக்க துவங்கியவர்தான் ஆர் முத்துராமன்.
பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஏ.வி.எம் நிறுவனமே நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக மாறினார் முத்துராமன். நிறைய திரைப்படங்களில் முத்துராமன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சினிமாவில் வரவேற்பு:
இந்த நிலையில் அவருடன் தனது அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரமிளா. 1970களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பிரமிளா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்த ஒரு முக்கியமான நடிகை ஆவார்.
தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக முத்துராமனுடன் இணைந்து 10 லிருந்து 15 திரைப்படம் வரை நடித்திருக்கிறார். இவர் ஒரு பேட்டிகள் பேசும் பொழுது முத்துராமனுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த நபர் முத்துராமன் எப்பொழுதும் எனக்கு ஏதாவது ஒரு நல்ல அட்வைஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார் முத்துராமன்.
சம்பளம் வாங்கிவிட்டு எப்படி சரியாக அதற்கான வரிகளை கட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு கூறக்கூடியவர் முத்துராமன் என்று கூறி வந்தார் அப்பொழுது அங்கு இருந்த தொகுப்பாளர் உங்களுக்கும் முத்துராமனுக்கும் இடையே ஒரு கிரஷ் இருந்ததாக பேச்சுக்கள் இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு பதிலளிக்க பிரமிளா ஆமாம் முத்துராமுடன் நடித்த காலகட்டத்தில் அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது.
நடிகைக்கு இருந்த ஈர்ப்பு:
அப்போது நான் மற்ற நடிகைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களிடம் முத்துராமனை புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பேன். இந்த விஷயத்தை ஒரு முறை முத்துராமனிடம் சென்று கூறிவிட்டனர். உடனே முத்துராமன் என்னை அழைத்து என்னை பற்றி எப்போதும் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாயாமே என்று கேட்டார்.
அதற்கு நான் பதில் சொல்லவில்லை உடனே என்னை இனிமேல் அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு எப்போது என்னை பார்த்தாலும் அது குறித்து கிண்டல் செய்து வந்தார் முத்துராமன் என்று கூறுகிறார் பிரமிளா.