பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகம் ஆகி பல காலகட்டங்கள் கடந்த பிறகுதான் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் அறிமுகமான வெகு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெறுவார்கள்.

அதே சமயம் வந்த வேகத்திற்கு காணாமல் போகும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்று திரும்ப உடனே காணாமல் போனவர்தான் நடிகை பிரணிதா சுபாஷ் .

தென்னிந்தியா முழுவதும் பிரபலம்:

பிரணிதாவைப் பொறுத்தவரை அவர் தமிழ் சினிமா மீது மட்டுமே கவனம் செலுத்திய ஒரு நடிகை என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமா மீது அவரது கவனம் இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு  என்று மூன்று மொழிகளிலுமே பிரபலமான ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.

2010 ஆம் ஆண்டு முதன் முதலில் கன்னட சினிமாவில்தான் அறிமுகமானார் நடிகை பிரணிதா. அதற்குப் பிறகு தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த அவர் அடுத்த வருடமே தமிழில் உதயன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

பிறகு கார்த்தி நடித்த சகுனி திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சகுனி திரைப்படம் மூலமாக பலர் கவனத்தை ஈர்த்தார். அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் யார் இந்த பெண் பார்ப்பதற்கு இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று அவரை கவனிக்க துவங்கினர்.

தெலுங்கில் வாய்ப்பு:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு வரத் துவங்கியது. தெலுங்கிலும் கன்னடத்திலும் அதே சமயத்தில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியது. இதனால் தொடர்ந்து தமிழில் கால் ஷீட் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் பிரணிதா.

பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த மாதிரி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே அவரை தமிழில் பார்க்க முடிந்தது. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்கிற திரைப்படத்தில் நடித்த பிறகு பிரணிதா தமிழில் திரைப்படங்களே நடிக்கவில்லை.

ஆனால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார். தற்சமயம் மலையாளத்திலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பிரணிதா.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பிரணிதா தொடர்ந்து சினிமா வாழ்க்கையிலும் கவனம் செலுத்து வருகிறார் தற்சமயம் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் ஒரு கவர்ச்சி புகைப்படம் மூலமாக வெளியிட்டு இருக்கிறார். பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு தன்னுடைய கர்ப்பமான வயிறு தெரிய இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்ததை அறிவித்துள்ளார் நடிகை பிரணிதா. இதனை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version