தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. தன்னுடைய இளமை காலங்கள் முதலே சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக பிரவீனா இருந்து வருகிறார்.
ஆனால் சினிமாவை விடவும் சின்னத்திரையில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கேரளாவில் சில திரைப்படங்களுக்காக விருதுகளும் வாங்கி இருக்கிறார் பிரவீனா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் கூட இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவரை சீரியலில்தான் தெரியும்.
தமிழ் சீரியலில் நடிக்கணும்னா:
அதிகபட்சம் சீரியல்களில் தற்சமயம் அம்மா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார் பிரவீனா. 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக கௌரி என்கிற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரவீனா.
அதற்குப் பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்திலேயே கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கினார். 1998 முதல் அவருக்கு வாய்ப்புகள் என்பது அதிகரித்தது. வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகை பிரவீனா.
அதிலும் உச்சப்பட்சமாக 1999 இல் ஒரே வாரத்தில் அவரது நடிப்பில் 10 திரைப்படங்கள் வெளிவந்தது. ஆனால் அதே சமயம் இரண்டாயிரத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் தமிழ் மலையாள சினிமாவில் குறைய துவங்கியது.
அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்:
வருடத்திற்கு மூன்றில் இருந்து நான்கு திரைப்படங்கள் வரை நடித்து வந்தார் பிரவீனா. பிறகு 2012க்கு பிறகு மீண்டும் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனால் இப்பொழுது எல்லாம் அவர் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வருகிறார்.
அதே சமயம் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் 2016 இல் சசிகுமார் நடித்து வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதேபோல தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி மாதிரியான பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் தொடர்ந்து இவர் நடித்திருக்கிறார்.
சீரியல்களை பொறுத்தவரை எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரவீனா. தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இவர் இருந்திருக்கிறார். அதிகபட்சம் இரண்டு மொழிகளிலும் நிறைய டிவி தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.
பிரவீனா ஓப்பன் டாக்:
தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகை ஆக இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சீரியல்களுக்கும் மலையாள சீரியல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்றால் ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும். ஆனால் மலையாள சீரியல்களை பொறுத்தவரை அதில் கதை இயல்பாக இருக்கும். அதற்கு ஏற்ற முகபாவனைகளை வெளிப்படுத்தினால் மட்டும் போதும்.
அதுவே சிறப்பாக அமைந்துவிடும். ஆனால் தமிழ் சீரியல்களில் ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும் என்பதால் முகபாவனைகள் அதிகமாக இருக்க வேண்டும் அதிர்ச்சியாக இருந்தால் கூட அதை அதிகமாக செய்ய வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை அதிகமாக செய்ய வேண்டும். ஒரு நடிகையாக இதை எல்லாம் சின்னத்திரையில் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டி உள்ளது என்று கூறியிருக்கிறார் நடிகை பிரவீனா.