18 வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சேன்.. ஆனா.. இப்போ..நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்க கூடிய நபர்களும், விஜேவாக பணிபுரியும் நபர்களும் திரை உலகில் ஜொலிக்க கூடிய வகையில் உயர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானதை அடுத்து தொலைக்காட்சியில் சீரியல் நாயகி ஆக நடித்து இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்த இருக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

இப்போது திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் குறித்து உருக்கமான பதிவினை வெளியிட்டு அனைவரையும் உறைய வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து அந்தப் பதிவில் அவர் பல வருடங்களாக ஒரு நபரை காதலித்து வந்ததாக சொன்னதோடு மட்டுமல்லாமல், அவரோடு அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் வெளியீட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய காதலரின் பிறந்த நாளை குறித்து பெரிய கேப்சன் கொடுத்த பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கக்கூடிய பிரியா பவானி ஷங்கர் அந்த பதிவில் என்ன சொல்லி இருக்கிறார் என தெரியுமா?

18 வயதில் தொடங்கிய காதல்..

கல்யாண முதல் காதல் வரை என்ற விஜய் டிவி சீரியலில் நடித்த இவர் இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் மிகையாகாது. சீரியல்களை பார்க்காத ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரையே சாரும்.

சீரியல்களில் கலக்கி வந்த இவர் சினிமா பட வாய்ப்பு கிடைக்க அதை தக்க வகையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் நடித்திருக்க கூடிய இவர் நடிகை ஆவதற்கு முன்பே 18 வயதிலேயே ராஜவேல் என்பவரை காதலித்து இருக்கிறார். தற்போது வரை இந்த காதல் ஒரு நீண்ட தொடர்கதையாக இவர்கள் இருவர் மத்தியிலும் உள்ளது.

காதல் குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கர்..

இந்நிலையில் தன் காதலனோடு கேப் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றி வரும் இவர் அவரோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த பதிவில் மனதில் இருக்கும் காதலை கவிஞரைப் போல் கொட்டி தீர்த்து இருக்கிறார்.

மேலும் அந்தப் பையன் என்னுடைய சிறந்த நண்பன் நாங்கள் ஒன்றாகவே சண்டையிடுவோம், சிரிப்போம், அழுவோம், அடிக்கடி மேக்கப் செய்து கொள்வோம்.

அத்தோடு அவர் சத்தமாக நம்பிக்கையோடு பல தவறான பாடல் வரிகளை பாட நாங்கள் இருவருமே ஏ அண்ட் ஜெட் வேறு, வேறு தான். ஆனாலும் என்னை எப்போதும் திருப்திப்படுத்தக் கூடிய நபராக இருக்கிறார். இருவர் இடையே எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் அன்பாகவும், ஜாலியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறோம்.

அது மட்டுமல்லாமல் அவரோடு அமர்ந்து அமைதியாக மனதில் இருக்கும் கஷ்டங்களை சூரிய அஸ்தமனம் ஆகும் அந்த மஞ்சள் மாலை பொழுதில் பேச முடியும் அதுவே எனக்கு போதும் இந்த வாழ்க்கை ஆனந்தமாகி விடும்.

அப்படி என் மேல் அன்பு செலுத்தும் ராஜவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவரும் வானம் வேறு என்றாலும் வாழ்த்துக்களோடு பிரியா பவானி ஷங்கர் என பதிவிட்டு இருக்கிறார்.

இந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பிரியா பவானி ஷங்கரின் காதலை ஆழமாக வெளிப்படுத்தி அதிக அளவு விமர்சனங்களை பெற்றுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version