வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு பிறகு வாய்ப்பை பெற்று நடிக்க துவங்குவார்கள்.

ஆனால் வடிவேலுவை பொருத்தவரை அவர் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சென்னைக்கு வந்தார். வந்தவுடனே திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் அடைய துவங்கினார் வடிவேலு. தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டங்களில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர்.

வடிவேலுவின் நடிப்பு:

அவர்களை தாண்டி ஒரு புது காமெடி நடிகர் வர முடியாது என்கிற நிலை இருந்தது. ஆனால் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து நடித்த போதும் கூட தன்னுடைய தனிப்பட்ட காமெடியை அங்கு வெளிப்படுத்தினார். இதனால் அவரை கவுண்டமணி அடித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

அப்படியெல்லாம் வளர்ச்சி கண்டு வந்த வடிவேலுவிற்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தவர் இயக்குனர் வி.சேகர். இயக்குனர் வி.சேகர் திரைப்படங்களில் தொடர்ந்து வடிவேலுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கிடைத்தது.

அதனை தொடர்ந்துதான் வடிவேலு சம்பளமும் அதிகரித்தது. முதன் முதலாக வடிவேலு கார் வாங்கியதும் வி.சேகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகதான், தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக வடிவேலு இருந்து வருகிறார்.

நடிக்கும்போது வரும் பிரச்சனை:

ஆனால் அதே சமயம் வடிவேலு குறித்த சர்ச்சைகளும் அதிகமாக இருந்து வருகிறது. வடிவேலுவுடன் பணிப்புரிந்த பல சின்ன நடிகர்களும் கூட இந்த விஷயங்களை பேட்டிகளில் கூறி இருக்கின்றனர். வடிவேலுவை தாண்டி நகைச்சுவை செய்யும் யாரையும் வடிவேலு கூட வைத்துக்கொள்ள மாட்டார் என்று அவர்கள் பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

இருந்தாலும் இன்னமும் வடிவேலுவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையாமல்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா ஒரு பேட்டியில் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது வடிவேலுவுடன் நடிக்கும் பொழுது நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க வேண்டும். ஏனெனில் வடிவேலு செய்யும் காமெடிகளை பார்த்தால் நமக்கு படப்பிடிப்பு இடத்திலேயே சிரிப்பு வந்துவிடும்.

அப்படியே படப்பிடிப்புகளில் வடிவேலுவின் காமெடிக்கு சிரித்ததனால் பலர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை இழந்து இருக்கின்றனர். அதனால் அவர் எவ்வளவு நகைச்சுவை செய்தாலும் சிரிக்காமல் நடிப்பதற்கு முடிந்தால் மட்டுமே வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க முடியும் என்று கூறுகிறார் பிரியங்கா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version