நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன்..! வடிவேலுவின் திமிர் பேச்சு..! ராதிகா கொடுத்த நெத்தியடி பதில்..!

தன்னை தூக்கி விட்ட ஏணியை எட்டி உதைத்த நபராக தற்போது வைகைப்புயல் வடிவேலு தனது பெயரை பல வகைகளிலும் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் தன்னை திரைத்துறையில் வளர்த்து விட்ட விஜய்காந்தின் மரணச் செய்தியை கேள்விப்பட்டு இறுதி அஞ்சலிக்கு செல்லாமல் இன்று வரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் மௌனம் சாதித்து வருவது தான் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

என்ன மனுஷன் டா.. இவன் என்று பலரும் கேட்கக்கூடிய வேளையில் இந்த பச்சோந்தி மனிதனின் உண்மை சாயம் வெளுத்து விட்டது. இதற்கு காரணம் இவர் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மட்டும் எப்படி பங்கேற்றார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் வடிவேலு பற்றி கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இந்த பேட்டியில் வடிவேலுவை பற்றி சரமாரியாக ராதிகா பேசியிருப்பது பலரையும் ஈர்த்துள்ளது.

மேலும் ராதிகா ஒரு முறை வடிவேலுவை விமான நிலையத்தில் சந்தித்த போது அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி நான் பேசினேன். ஏற்கனவே என் மகன் வடிவேலு படம் என்றால் குஷியாகி விடுவான். அப்போது அவனும் அங்கு இருந்ததால் அங்கிள் நீங்க என் அப்பாவோடு நடிக்கிறீர்களா? என்று ஆசையோடு கேட்டார்.

அதற்கு வடிவேலு குழந்தை இப்படி கேட்கிறானே என்று கூட நினைக்காமல் சிரித்துக்கொண்டே அரசியல்வாதிக்கெல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை என்று கூறினார். இதில் இவர் எங்களுக்கு என்ன வாழ்க்கை கொடுக்க வேண்டி இருக்கிறது.

மேலும் வடிவேலுவின் நிலைமை இப்போது எப்படி இருக்கு. நாங்க எப்படி இருக்கிறோம் என்று ஒருமையில் பேசி வார்த்தையால் சுட்டு இருப்பதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் எம் ஆர் ராதாவின் பெண் என்பதை ப்ரூப் செய்து விட்டதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

இப்படி வாழ்க்கையில் இரட்டை வேஷம் போட்டு வந்த நடிகர் வடிவேலுவின் நிலை தற்போது படுமோசமாகிவிட்டது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. எனவே இனி இவருக்கு திரை வாய்ப்புகள் கிடைக்குமா? அப்படி கிடைத்தாலும் ஜொலிப்பாரா? என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam