இந்த நாளை மறக்க முடியாது.. உருகிய ரச்சிதா மகாலட்சுமி..! – கூடவே அறிவுரை.. அவருக்கானாதா..?

பிரபல சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு இணைய வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மகாலட்சுமி.

இது குறித்து அவர் பேசியதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல வருடங்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த காத்திருப்பின் பயனாக பிக் பாஸ் ஆறாவது சீசனின் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருந்தார்.

மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கின்றது. அது பற்றி தெரியாமல் ஒருவரை பற்றி பேசுவது கூடாது என்று ரச்சிதா மகாலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே சீரியல்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

தன்னுடைய நிஜமுகம் என்ன என்பதை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்று பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

இந்நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய உண்மையான முகத்தை மட்டுமே காட்ட வேண்டும் என்று முயற்சித்து வந்தார் ரச்சிதா மஹாலக்ஷ்மி.

ஆனால் இவருடைய உண்மையான முகம் இது கிடையாது.. படப்பிடிப்பு தளத்தில் இவரை நாங்கள் பார்த்திருக்கிறோம்.. இவர் இந்த வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை மறைக்கிறார் என்று போட்டியாளராக கலந்து கொண்ட சீரியல் நடிகைகள் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆனால் இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு காது கொடுக்காமல் நான் எப்போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்று ஒரு தலைப்புடன் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் நடிகர் ரச்சித மாகாலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு முகமூடி போட்டுக் கொண்டுதான் இருந்து வந்தார். அவருடைய உண்மையான முகத்துடன் அவர் இருக்கவில்லை என்று தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யாருடைய வாழ்க்கையை பற்றியும் தெரியாமல்.. அவர்களுடைய உண்மையான குணம் என்ன என்று தெரியாமல்..யாரையும் ஜட்ஜ் பண்ணாதீர்கள் என்று கூறியிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்… அவர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு காரணம்.. இவை எல்லாம் எதுவும் தெரியாமல் ஒருவரை பார்த்தவுடன் அவர் இப்படித்தான் என்று முடிவு செய்வதும்.. அவர் மீது வெறுப்பை பரப்புவதும் தேவையற்ற ஒரு வேலை.

நேர்மறையான சிந்தனைகளை பரப்புவோம் என்று பேசியிருக்கிறார் நடிகை ரச்]சிதா மகாலட்சுமி. இவருடைய இந்த பதிவுக்கு சில ரசிகர்கள் ஆதரவாகவும் சில ரசிகர்கள் எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Rachitha Mahalakshmi recently made a statement that we should not judge a book by its cover. This message is resonating with many people, especially in today’s world where there is so much emphasis on outward appearance and physical beauty.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam