ராதிகாவை உலுக்கிய துணி மாற்றும் வீடியோ… தலை விரித்தாடும் பாலியல் குற்றங்கள்..!

தற்சமயம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த பிரச்சனைகள்தான் அதிகமாக எங்கும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது.

பிறகு போலீசார் விசாரணை நடந்த பொழுது அதற்கு காரணம் மலையாள சினிமாவில் உள்ள ஒரு நடிகர்தான் என்பது தெரிந்தது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி அமைத்து அதன் மூலமாக கேரளாவில் கேரள சினிமாவில் நடக்கும் பாலியக் கொடுமைகள் குறித்த அறிக்கையை உருவாக்குமாறு அரசு உத்தரவிட்டது.

கேரள பிரச்சனை:

இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹேமா என்பவர் தலைமை பங்கை வகித்தார். அவர் தற்சமயம் திரட்டி இருக்கும் தகவல்கள் எல்லாம் பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. மேலும் நடிகைகள் பலரும் துணிச்சலாக இந்த நடிகர்களின் குற்றங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அறிக்கையே முழுதாக இன்னும் வெளியாகாத நிலையிலேயே அதில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தொடர்ந்து பிரபலங்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து வெளியில் கூறவும் துவங்கி விட்டனர்.

ராதிகாவை உலுக்கிய சம்பவம்:

முக்கியமாக மற்ற மொழி நடிகைகள் மலையாளத்தில் சென்று நடித்த பொழுது அவர்களுக்கு நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ராதிகாவும் அதிர்ச்சி தரும் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே மிகப் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். பெரும்பாலும் ஒரு மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மற்ற மொழியிலும் நடிப்பது உண்டு. அந்த வகையில் இளமை காலங்களில் ராதிகாவிற்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது.

பாலியல் குற்றங்கள்

அப்படி ஒரு முறை அவர் மலையாளத்தில் நடிக்க சென்ற பொழுது அங்கே சிலர் ஒன்றாக அமர்ந்து ஏதோ ஒரு வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதை பார்த்து சிரிக்கின்றனர் என விசாரிக்கும் பொழுது அவர்கள் கேரவனில் ரகசிய கேமராக்களை வைத்து அங்கு நடிகைகள் துணி மாற்றுவதை வீடியோ எடுக்கின்றனர்.

பிறகு அவற்றை உட்கார்ந்து பார்க்கின்றனர் என்பதை அறிந்து கொண்டார் ராதிகா இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம் இதனால் கேரவனில் துணி மாற்றுவதேயே அவர் விட்டு விட்டாராம். எப்போது துணி மாற்ற வேண்டும் என்றாலும் ஹோட்டல் அறைக்கு சென்று துணி மாற்றுவதை வழக்கமாகக் கொண்டார் என்று அவர் கூறியிருக்கிறார் இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version