தொடை அழகிக்கு இந்த நிலைமையா…? வீட்டை விற்ற ரம்பா..! கூவி கூவி வித்தும் விலை போகாத கொடுமை..!

நடிகை ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். இவர் 1974 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிறந்திருக்கிறார். இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். திரையுலகில் நடிப்பதற்காக முதலில் தனது பெயரை அம்ரிதா எனவும் அதன் பின் ரம்பா எனவும் மாற்றி அமைத்துக் கொண்டார்.

மேலும் நடிகை ரம்பா ஆரம்ப காலத்தில் பாலிவுட் படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்வதை அடுத்து அவருக்கு பெங்காலி, கன்னடம், போஜ்புரி போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சிக்கான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக விளங்கியிருக்கிறார்.

வீட்டை விற்ற ரம்பா..

தமிழ் சினிமாவை பொறுத்த வரை 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து ராசி இல்லாத நடிகை என்ற பெயரை பெற்ற இவர் 1996-இல் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.

90 – ஸ் கிட்ஸின் பேவரைட் நடிகையாக திகழ்ந்த நடிகை ரம்பா செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா,  மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் அந்தக் காலத்தில் தொடை அழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா திரை உலகில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே தமிழ் திரையில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் என பல நடிகர்களோடு நடித்து அசத்தியவர்.

இவர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாபனை  திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகி சிறப்பான முறையில் குடும்பம் நடத்தி வருகின்ற வேளையில் தனக்கு ஏற்பட்ட தயாரிப்பாளர் ஆசையால் கடலில் மூழ்கி வீட்டை விற்ற சோகம் தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடையழகிக்கு இந்த நிலைமையா?

இந்த விஷயத்தை பிரபல திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு நேர்த்தியான முறையில் விளக்கி இருப்பதோடு இவர் தொடைக்கு போட்ட இன்சூரன்ஸை வாழ்க்கைக்கு போட்டு இருக்கலாம் என பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளுக்கு இது போன்ற ஆசைகள் வருவது இயல்புதான். எனினும் அது நல்ல முறையில் நடக்குமா? என்பதை பலமுறை யோசித்து தான் களத்தில் இறங்க வேண்டும். ஏற்கனவே இவரை போல நடிகையர் திலகம் சாவித்திரியும் பட தயாரிப்பில் ஈடுபட்டு பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பிரபலமான ரம்பாவும் தயாரிப்பில் ஈடுபட்டு அதிகளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார்  இந்த படத்தில் ஜோதிகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனது சகோதரரின் உதவியோடு இந்த படத்தை தயாரித்து நடித்தார்.

எனினும் இந்த படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அத்தோடு படம் வெளியான பிறகு நடிகை ரம்பா கடலில் மூழ்கினார்.

கூவி கூவி வித்தும் விலைக்கு போகாத கொடுமை..

இதனை அடுத்து இந்த கடனை அடைப்பதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை கூவிக் கூவி வித்து விட்டார். எனினும் பல படங்களில் ரம்பா தொடர்ந்து நடித்த போதும் அவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததை அடுத்து திரைப்பட உலகை விட்டு விலகி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் 2011 ஆம் ஆண்டு பிலிம் ஸ்டார் என்ற மலையாள திரைப்படத்தில் ரம்பா நடிக்க அதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. அத்தோடு சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சமூக ஊடகங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இதற்கிடையே ரம்பாவுக்கும் அவரது அன்பு கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்தில் நடக்க உள்ளதாக வெளி வந்த தகவல்களை நடிகை ரம்பா மறுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version