அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா என்பதாகும். ஆரம்பத்தில் இவர் கன்னடத்தில்தான் நடித்து வந்தார்.

கன்னடத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் குத்து திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் பொழுதே அவரது பெயரை ரம்யா என்று வைத்துக் கொண்டார்.

2 நடிகரோடும் என் திருமணம்

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குத்து ரம்யா என்று அனைவராலும் அறியப்படுகிறார். இந்த நடிகை ரம்யாவை பொருத்தவரை குத்து திரைப்படத்திலேயே ஓரளவு கவர்ச்சி காட்டிதான் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அந்த படமே அவருக்கு ஒரு பிரபலமான படமாக இருந்தது. அதற்கு பிறகு கிரி, பொல்லாதவன் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரி திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் இரண்டு வருடங்கள் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை.

கன்னட சினிமாவில் பிரபலம்

தொடர்ந்து கன்னட சினிமாவில் வரிசையாக பத்துக்கும் அதிகமான திரைப்படங்களை இவர் நடித்தார். அதில் நிறைய திரைப்படங்களில் அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார் நடிகை ரம்யா. பிறகு மிக தாமதமாகதான் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு பொல்லாதவன் திரைப்படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவை விட அரசியல் மீது அதிக ஈடுபாடு காட்டத் துவங்கினார் ரம்யா. அதனை தொடர்ந்து அவருக்கு அரசியல் வட்டாரத்திலும் வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் பிரபலங்கள் அரசியலுக்கு செல்லும் பொழுது மிக எளிதாகவே அவர்களுக்கு அங்கு வாய்ப்புகள் கிடைத்துவிடும்.

உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா

அந்த வகையில் இவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 40 வயதை கடந்த பிறகும் கூட இப்பொழுதும் ரம்யா திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் எப்பொழுதுமே ரம்யா குறித்து திருமண செய்தி என்பது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கு முன்பு ஒரு முறை இவர் நடிகர் சிம்புவை திருமணம் செய்ய இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஏனெனில் சிம்புவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது அனைவரும் அந்த விஷயமே.

அதே போல நடிகர் தனுஷும் இவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பி வந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு தொழிலதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.

இதனால் கோபமடைந்த நடிகை ரம்யா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது ஏற்கனவே எனக்கு இரண்டு பேரோடு திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். மீண்டும் மீண்டும் அதை செய்யாதீர்கள். நான் திருமணம் செய்வதாக இருந்தால் நானே அதை அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் ரம்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version