இந்த கேரக்டருக்கு கூட அதை கேக்குறாங்க.. ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பாரதி கண்ணம்மா ரேஷ்மா..!

நடிகை ரேஷ்மா பிரசாத் சின்னத்திரையில் நிகழ்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓப்பனாக பேசிய விஷயம் தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

ஏற்கனவே பெரிய திரைகளில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் நடந்து வருவதை குறித்தும் அதனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் அது சம்பந்தப்பட்ட வெளிப்படையான உண்மைகளை இணையங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகையான ரேஷ்மா பிரசாத் சின்னத்திரையில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பாரதி கண்ணம்மா ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா பிரசாத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தவர். தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பகுதி வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் கண்ணம்மாவாக வினுஷா நடிக்க பாரதி கதாபாத்திரத்தில் சிபி சூரியன் நடித்திருப்பார்.

மேலும் பாரதி மற்றும் கண்ணம்மா என்ற இரண்டு தோழிகளுக்கும் உற்ற தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த நடிகை ரேஷ்மா பிரசாத்.

இவர் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் குறும்படம், youtube நிகழ்ச்சிகளில் நடித்தவர். சில காலம் சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த இவர் தற்போது முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

கேரக்டருக்கு கூட அதை கேக்குறாங்க..

மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக காணப்படும் இவர் பல்வேறு தனியார் சேனல்களுக்கு அடிக்கடி பேட்டி அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சில் திரைத்துறையில் நடிக்கக்கூடிய பெண் நடிகைகள் வளருவது என்பது சாமானிய விஷயம் அல்ல என்ற கருத்தை தெரிவித்து இருக்க கூடிய இவர் சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகைகள் பலரும் பல்வேறு இன்னல்களை தாண்டித்தான் வெற்றி பெற வேண்டி உள்ளது என்பதையும் கூறி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் பெரிய திரையில் நடக்கின்ற அட்ஜஸ்மெண்டுகள் சின்ன திரையிலும் அதிகளவு புழக்கத்தில் உள்ளது என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.

ரகசியத்தை உடைத்த ரேஷ்மா..

இதனால் தான் நடிகை ரேஷ்மா ஒரு குறிப்பிட்ட இடை வெளியை சின்னத்திரையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறாரோ என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடிய விஷயத்தில் தான் பெரிய திரையில் நடிக்கக்கூடிய முயற்சியை நிறுத்தி விட்டேன். அத்துடன் சின்னத்திரையில் நடிக்கப் போனாலும் உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஓகே வா என்று கேட்கிறார்கள் என்ற விஷயம் இணையத்தை அதிரவிட்டது.

இதனைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து இருப்பதோடு இந்த தகவலை கலாட்டா மீடியாவின் மூலம் பகிர்ந்திருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் உடைத்த ரகசியம் பற்றி ரசிகர்களின் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு விடிவு காலமே பிறக்காதா என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் திறமையின் அடிப்படையில் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் மட்டும் தான் அது சிறப்பாக இருக்கும். அதை விடுத்து பெண்களை எப்படி பலி கெடாவாக மாற்றுவது தவறு என்பது தெரிந்தும் அட்ஜஸ்ட்மெண்டை தொடர்வது அநாகரீகமாக உள்ளது என்கிறார்கள்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மீடூ புகார்கள் குறித்து பல்வேறு செய்திகள் இணையங்களில் தினம் தினம் வெளி வரக்கூடிய வேளையில் சின்னத்திரையை சேர்ந்த நடிகை ஒருவர் சின்ன திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version