2 கல்யாணம்.. 2 டைவர்ஸ்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக பார்க்கப்படுபவர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி இவர் முதன்முதலில் தொகுப்பாளினியாக தனது பணியைத் தொடங்கி அதன் பின்னர்,

மாடலிங் தொழிலில் தனது காலடி எடுத்து வைத்து பின்னர் சினிமா வாய்ப்பை பெற்றார். பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

ரேஷ்மா பசுபுலேட்டி:

ஆம் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில்,

புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து தான் ரேஷ்மா சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த அந்த ரோல் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டது.

அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.

இதனிடையே பல்வேறு சீரியல்களில் நடித்த வந்த அவர் குறிப்பாக வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார்.

இதனுடைய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

பிக்பாஸில் ரேஷ்மா:

சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அல்லது கட்டழகு தோற்றத்தை காட்டி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை தனது வாழ்வில் நடந்த மிக மோசமான அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

எனக்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து நடந்து விட்டது. எனக்கு ஒரு மகன் இருக்கிறான். முதல் திருமணம் எனது பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான்.

ஆனால் அவர் என்னை அடிமை போல் நடத்தியதால் நான் அவரிடமிருந்து பிரிந்து வர வேண்டும் விடுதலை பெற வேண்டும் என விவாகரத்து செய்து விட்டேன்.

அதன் பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்தேன். அங்கு பாக்ஸர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

2 கல்யாணம்.. 2 டைவர்ஸ்:

அமெரிக்காவிலே செட்டில் ஆகி இருந்தேன். முதலில் அவர் நல்லவர் போன்று தான் என்னிடம் நடந்து கொண்டார்.

அதன்பின் பல பெண்களுடன் அவர் உறவு வைத்திருப்பது எனக்கு தெரிய வந்தது. இதை பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அவரிடம் கேட்டதற்கு என்னை ஓங்கி அடித்துவிட்டார்.

அந்த நேரத்தில் நான் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தேன். எனக்கு பயங்கர வயிற்று வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் உதவிக்கு கூட வரவில்லை.

யாரும் எனக்கு உதவ வரவில்லை நானே தனியாளாக கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் பின்னர் சில மாதம் கழித்து என் மகன் பிறந்தான்.

என் மகன் மிகவும் வீக்கான குழந்தையாக பிறந்து தொடர்ந்து 4…5 மாதங்கள் இன்க்பெட்டிலே இருந்தான். அவனுக்கு தினம்தோறும் நான் பிசியோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும்.

அவன் உயிரோடு பிழைப்பான மாட்டானா என்பதை எனக்கு சந்தேகமாக இருந்தது. அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டேன்.

உயிர் பிழைத்த மகன்:

இந்தியா வந்ததும் எனது மகனை பார்த்துக்கொள்ள தேவையான மருத்துவ செலவுகளுக்கு போதிய பணம் என்னிடம் இல்லாததால்,

நான் ஒரே நேரத்தில் மூன்று நான்கு வேலைகளை செய்து பணம் சம்பாதித்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து என் மகனுக்கு சிகிச்சை அளித்து அவனை குணமாக்கினேன்.

இப்போது நன்றாக இருக்கிறான். அவன் தான் எனக்கு பாதுகாப்பாக ஆறுதலாகவும் இருக்கிறான் என ரேஷ்மா பசுபுலேட்டி மிகுந்த வேதனையுடன் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version