4 மாத கர்ப்பம்.. வெளியே வந்த குழந்தை.. பார்த்ததும் ஓடிப்போன புருஷன்.. அடுத்த நொடி ரேஷ்மா பசுபுலேட்டி செய்த செயல்..!

சினிமா சீரியல் என்று இரண்டு துறைகளிலுமே தற்சமயம் கலக்கி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு தேசத்தை தாயகமாகக் கொண்ட ரேஷ்மா தமிழில் வாய்ப்பை பெற்று முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு வந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதில் அவர் நடித்த புஷ்பா என்னும் கதாபாத்திரத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து டிவி சீரியல்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின.

விஜய் டிவியில் பிரபலம்:

இதற்கு நடுவே விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரேஷ்மா. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு இன்னும் அதிகமான வரவேற்பு கிடைக்கும்.அதே மாதிரி ரேஷ்மாவிற்கும் கிடைத்தது.

தொடர்ந்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார் ரேஷ்மா. திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே அவர் நாடகங்களில் நடித்து வந்தவர் என்பதால் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பது அவருக்கு ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

அந்த சீரியல் அவருக்கு இன்னும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.  எப்போதும் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகைகளில் ரேஷ்மாவும் முக்கியமானவராக இருந்து வருகிறார்.

வாழ்க்கையில் துயரம்:

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது, ”திருமணத்திற்கு பிறகு நான் அமெரிக்காவில் இருந்தேன் என்னுடைய கணவர் ஒரு பாக்ஸராக இருந்து வந்தார். அவரது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு நிறைய மருந்து மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதை அவர் மறந்துவிட்டு என்னை பலமாக அடித்துவிட்டார். அப்போதே எனது குழந்தை வெளியில் வந்துவிட்டது. அதை கண்டு பயத்தில் அவர் என்னை விட்டு ஓடிவிட்டார் அந்த சமயத்திலும் நான் காரை எடுத்துக் கொண்டு தனியாக மருத்துவமனைக்கு எடுத்து வந்து  நானே மருத்துவமனையில் அட்மிட் ஆனேன்.

குழந்தையை காப்பாற்ற பட்ட கஷ்டம்:

நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். அப்போதிலிருந்து ஒன்பது மாதம் வரை அவனை இன்குபெட்டரில்தான் வைத்திருந்தனர். அவனை பிழைக்க வைப்பதற்காக நான் பார்க்காத மருத்துவம் கிடையாது. செய்யாத செலவு கிடையாது. ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து அது இறந்து விட்டது.

இதனால் ராகுலையும் நான் இழந்து விடுவேன் என்கிற பயம் எனக்குள் இருந்தது. எனவே அவனை காப்பாற்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினேன். என்னுடைய முதல் குழந்தை இறந்ததை எல்லோரும் மறந்து விட்டனர்.

ஆனால் அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. வாழ்க்கையில் என்னை போல சிரித்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவர் பின்னாடியும் துயரமான ஒரு முகம் இருக்கும். ஆனால் அது வெளியில் உள்ள யாருக்கும் தெரியாது அவர்களுக்கு எங்களை விமர்சிக்க மட்டும்தான் தெரியும்” என்று கூறியிருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version