47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி..! அதுவும் எப்படி தெரியுமா..?

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை ரேவதி பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ரேவதி மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி, ஆங்கில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றவர்.

நடிகை ரேவதி..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேவதி 1966-ஆம் ஆண்டு கொச்சியில் பிறந்தவர். இதனை அடுத்து இவர் 1981 மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 1984-இல் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை தக்க முறை பயன்படுத்தியதை அடுத்து பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து 1985-இல் ஆகாயத்தாமரைகள், ஆண்பாவம், உதயகீதம், ஒரு கைதியின் டைரி, கன்னிராசி, செல்வி, பகல் நிலவு, பிரேம பாசம், திறமை போன்ற படங்களில் நடித்த இவர் 1986-இல் மௌன ராகம், லட்சுமி வந்தாச்சு, புன்னகை மன்னன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 1987 இல் கிராமத்து மின்னல், இலிங்கேஸ்வரன் படத்தில் நடித்த இவர் 1999-இல் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

47 வயதில் குழந்தை பெற்ற ரேவதி..

திரைப்படங்களில் தனக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு வரம்பு மீறி கவர்ச்சி காட்டாமல் குடும்ப பங்கினியாக நடித்து வந்த நடிகை ரேவதி பல விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல் 1988-இல் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2022-ஆம் ஆண்டு முற்றுப்பெற்று விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 47 வயதில் குழந்தையை பெற்றிருக்கும் நடிகை ரேவதி அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த குழந்தை ரேவதிக்கு டெஸ்ட் டியூப் பேபியாக பிறந்த குழந்தையாகும்.

எப்படி தெரியுமா?..

மேலும் நடிகை ரேவதி 2018 – ஆம் ஆண்டில் தனக்கு ஐந்து வயதில் மகி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது என்று கூறியதை அடுத்து மிகப்பெரிய சந்தேகங்கள் கிளம்பியதோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தையை தத்தெடுத்து வளத்தி வரலாம் என்று பலரும் பேசி வந்தார்கள்.

இதனை அடுத்துத் தான் இந்த கேள்விக்கு பதில் அளித்த ரேவதி, தான் டெஸ்ட் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக பதில் அளித்து இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் நடிகை ரேவதி வளத்தி வரும் குழந்தை தத்து குழந்தை அல்ல. அவர் பெற்றெடுத்த குழந்தை என்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் சில ரசிகர்கள் டெஸ்ட் மூலம் இவர் பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் என்ற விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அது வளர்ப்பு பிள்ளை அல்ல சொந்த பிள்ளை என்ற விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version