நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கிறுகிறுன்னு வருதே..!

தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ரேவதி 1966 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் கொச்சியில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அன்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ரேவதி படம் என்றால் விழுந்தடித்து பார்க்கக்கூடிய அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்துள்ளது.

நடிகை ரேவதி..

நடிகை ரேவதி 1981-ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து 1984-இல் புதுமைப்பெண், ஆகாயத்தாமரைகள், ஆண் பாவம், உதயகீதம், ஒரு கைதியின் டைரி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றார்.

இந்நிலையில் இவர் ஒரே ஆண்டில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் தேவர் மகன், புதிய முகம், மௌன ராகம் போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் இவர் மித்ர மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தையும் பிர் மிலேங்கே என்ற ஹிந்தி படத்தையும் இயக்கி பெண் இயக்குனர்களில் ஒருவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

மேலும் 90-களில் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்த மோகன், பிரபு, கமலஹாசன் உள்ளிட்டவர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் 1988-ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு..

இதனை அடுத்து இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் ரேவதிக்கு குழந்தை பிறக்காத காரணத்தால் தான் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்ததாக செய்திகள் அன்று வேகமாக காட்டு தீ போல் ஊடகங்களில் பரவியது.

அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரேவதி தனது கணவரை பிரிந்த பிறகு ஐ வி எஃப் மூலம் ஒரு குழந்தைக்கு தாயாகி தற்போது அந்த குழந்தையோடு வாழ்ந்து வருகிறார்.

தற்போது 58 வயதை தொட்டிருக்கக்கூடிய நடிகை ரேவதி குணச்சித்திர வேடங்களை ஏற்று சில திரைப்படங்களில் தற்போதும் நடித்த வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அந்த வகையில் இவரது பிறந்த நாளை கொண்டாட கூடிய சமயத்தில் ரேவதியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையங்களில் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.

அந்த வகையில் ரேவதிக்கு சுமார் 50 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என்ற செய்தி தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேட்டதும் கிறுகிறுன்னு வருதா..

இந்த விஷயத்தை கேட்டதும் ரசிகர்கள் அனைவரும் அப்பா.. கிறு கிறுன்னு வருதே என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரேவதிக்கு கேரளாவில் கிளாசிக் லுக் உடன் ஒரு வீடு இருப்பதாகவும் அதன் விலை 3 முதல் 4 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருக்கும் ஹைடெக் வீட்டின் விலை 5 கோடி இருக்குமாம். மேலும் இரண்டு ஆடம்பர கார்களையும் இவர் வைத்துள்ளதாக இணையங்களில் வைரலாகி செய்திகள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் 47 வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த ரேவதியின் சொத்து மதிப்பை அறிந்து கொண்டு அடேங்கப்பா என்ற ஒரு ஒற்றை வார்த்தையை போட்டு ஆச்சரியத்தோடு நண்பர்கள் மத்தியில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version