நிறத்தை காரணம் காட்டி.. இதை பண்ணியிருக்காங்க… நடிகை ரித்விகா பரபரப்பு குற்றச்சாட்டு..!

இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. பொதுவாகவே இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிகர் நடிகைகளை சிறப்பாக நடிக்க வைக்க கூடியவர் என்பதால் அவர் படங்களில் அறிமுகமாகும் நடிகர்களும் நடிகைகளும் அதிகமாக வரவேற்பை பெறுவார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்தது மூலமாகதான் நடிகர் அதர்வாவும் தமிழ் சினிமாவில் அதிகம் வரவேற்பை பெற்றார். அந்த வகையில் நடிகை ரித்விகாவிற்கு பரதேசி திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். முக்கியமாக இயக்குனர் பா.ரஞ்சித் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வந்தார். பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள்:

Actress Rithvika Portfolio Photoshoot Stills

அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்ற கதாபாத்திரமாக அமைந்ததால் தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரித்விகா. தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்திலும் இவர் ரஜினியின் வளர்ப்பு மகள் மாதிரியான கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

இதற்குப் பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ரித்விகாவிற்கு 2019க்கு பிறகு வாய்ப்புகள் கிடைப்பது குறைந்தது. கொரோனா காலகட்டம் என்பதால் அவருக்கு அப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

வாய்ப்புகள் குறைவு:

அதனால் 2020 மற்றும் 2021ல் இவரது நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் வாய்ப்புகளைப் பெற்று நடித்து வருகிறார் ரித்விகா. ஆனால் எல்லா திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்து வருகிறார்.

பெரிய கதாபாத்திரம் என்று எதுவுமே அவருக்கு இப்போது வரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து பெண்கள் உரிமை சார்ந்தும் நிறைய பேசி வருகிறார் ரித்விகா. இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழில் நடந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தற்சமயம் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த வாரம் அதில் கருப்பு அழகு கணவன்கள் மற்றும் சிவப்பு அழகு மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்து வந்தது. அதில் பேசிய ரித்விகா சினிமாவில் நான் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் நிறத்தால் எனக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

நேரடியாகவே சிலர் இந்த படத்திற்கு நல்ல நிறத்தில் இருக்கும் பெண்களை தேடுகிறோம் என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அந்த பெண்கள் கலராகதான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் நிறத்தை கம்மியாக்கி படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள் அப்பொழுதெல்லாம் எனது மனது வலிக்கும் என்று தனது மன வேதனையை தெரிவித்திருக்கிறார் ரித்விகா,

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version